காவிரி தீர்ப்பு: சென்னையில் ஜெ. உண்ணாவிரதம்-திமுக அரசு தூக்கி எறியப்படும் என ஆவேசம்!
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கூட்டணி அரசும், திமுக அரசும் தமிழகமக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டன. மக்கள் இந்த அரசை விரைவில் தூக்கி எறிவார்கள் என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளின் போக்கைக் கண்டித்தும், நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில்வெளியிடக் கோரியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று உண்ணாவிரதப் போராட்டம்நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி வள்ளுவர் கோட்டம் எதிரே இன்று காலை ஜெயலலிதா உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
வள்ளுவர் கோட்டம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு பின்புறம் பிரமாண்ட மேடையும், இரு பக்கமும்பிரமாண்ட பந்தலும் போடப்பட்டிருந்தது. சென்னை தவிர தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும்ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்திருந்ததால் வள்ளுவர் கோட்டப் பகுதியே மக்கள் தலையாககாணப்பட்டது.
மேடைக்கு வந்த ஜெயலலிதாவை அதிமுக முன்னணியினர் மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர்ஜெயலலிதா தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
மேடையில் ஜெயலலிதாவுடன், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் அமர்ந்திருந்தனர்.
மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், ஜெயலலிதாவுக்கு பூச்செண்டு கொடுத்துஉண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். காலை சரியாக 9 மணிக்கு ஜெயலலிதாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கியது.
அதிமுக போராட்டத்திற்கு கூட்டணிக் கட்சிகளான மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக்,இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம், சமூக நீதிக் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக்,அகில இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் கூட்டமாக இருந்ததால், பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போக்குவரத்து நிறுத்தப்பட்ட வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது.
காவிரிப் பிரச்சினைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 1993ம்ஆண்டு முதல்வராக இருந்தபோது, ஜூலை 18ம் தேதி மெரீனா கடற்கரையில் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்தார்.
நான்கு நாட்களுக்கு நீடித்த அந்தப் போராட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் வி.சி. சுக்லா சென்னைக்குவந்து உறுதிமொழி கொடுத்து முடித்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
உண்ணாவிரதத்தின் இடையே ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை கெஜட்டில் வெளியிட திமுக அரசுக்கு விருப்பமே இல்லை. மத்திய அரசுக்கும் விருப்பம் இல்லை.
தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டால், கர்நாடகத்தில் தனது ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என காங்கிரஸ்அஞ்சுகிறது. அதேபோல, கர்நாடகத்தில் தனது குடும்பத்தினர் நடத்தி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்குக்கிடைக்கும் வருமானம் போய் விடும் என்ற பயம் கருணாநிதிக்கு.
உடனடியாக காவிரித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை கெஜட்டில் வெளியிட நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக மக்களுக்குத் தொடர்ந்து துரோகம்இழைக்க முற்பட்டால், மாநில அரசும் தூக்கி எறியப்படும், மத்திய அரசும் தூக்கி எறியப்படும்.
விரைவில் அதிமுக மாநிலத்தில் ஆட்சிக்கு வரும், மத்தியிலும் அதிமுக ஆதரவுடன் புதிய மத்திய அரசுஅமையும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட நடவடிக்கைஎடுப்போம். விவசாயிகளின் துயர் துடைப்போம்.
தீர்ப்பு வெளியாகி ஒன்றரை மாதங்களாகி விட்டது. இதுவரை தீர்ப்பை கெஜட்டில் வெளியிட நடவடிக்கைஎடுக்கவில்லை. இதுகுறித்துக் கேட்டால் 90 நாட்கள் அவகாசம் இருக்கிறது, சட்டச் சிக்கல் வரும் என்றுஉண்மைக்குப் புறம்பான காரணங்களைக் கூறி வருகிறார் கருணாநிதி.
கருணாநிதியின் இந்தப் பேச்சு மக்களை திசை திருப்பும் வகையிலேயே உள்ளது. கருணாநிதி சொல்வதைப் போல90 நாட்களுக்குப் பிறகே தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை என்றார்ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரத இடத்திற்கு வருகைதந்தார். ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ஜெயலலிதாவின்உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், காவிரிப் பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதா அடுக்கடுக்கான முயற்சிகளைமேற்கொண்டு வருகிறார். 1993ம் ஆண்டு தொடர்ந்து நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மத்தியநீர்வளத்துறை அமைச்சரை சென்னைக்கு வரவழைத்தார்.
ஆனால் ஜெயலலிதாவுக்கு மாறாக கருணாநிதி செயல்பட்டு வருகிறார். ஏதோ, கர்நாடக மாநில முதல்வர் போலஅவர் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும், மாநிலத்திலும் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும்என்றார் வைகோ. முன்னதாக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் நிகழ்ச்சியில் பேசினர்.
ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அந்தப்பகுதியே திருவிழாக் கூட்டமாக காணப்பட்டது.
உண்ணாவிரத மேடையில் இருந்தபடி தொண்டர்களைப் பார்த்து அவ்வப்போது ஜெயலலிதா கையசைத்தபடிஇருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications