ஸ்ரீரங்கம்: பெரியார் சிலை மீது குங்கும வீச்சு
ஸ்ரீரங்கம்:திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை மீது குங்குமம் வீச முயன்ற இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கதிர்வேலுவை போலீஸார் வளைத்துப்பிடித்துக் கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் அருகே பெரியார் சிலை நிறுவப்பட்டது. முதலில் சிமென்ட் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை கடந்த டிசம்பர்மாதம் தகர்க்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் பெரும் வன்முறை மூண்டது.
இந்துக் கோவில்களில் தாக்குதல் நடத்தப்பட்டு சுவாமி சிலைகள் தாக்கப்பட்டன. பின்னர் வெண்கலச் சிலை வைக்கப்பட்டு, புதிய சிலையை திமுக.தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரியார் சிலைக்கு 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மதியம் ஒருவர் சிலையைநோக்கி வேகமாக ஓடி வந்தார். தனது கையில் சந்தனம் மற்றும் குங்குமத்தை தண்ணீரில் கரைத்து வைத்திருந்தார்.அதை அப்படியே சிலை வாளியோடு வீசினார். ஆனால் குங்கும, சந்தனக் கரைசல், சிலை மீது படாமல் பீடத்தின் மீது கொட்டியது. இதைப் பார்த்தபோலீஸார் உடனடியாக விரைந்து சென்று அந்த நபரைப் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் கதிர்வேலு என்பதும், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளராக அவர் உள்ளார்என்பதும் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications