உலகக் கோப்பையிலிருந்து பாக். வெளியேற்றம்
கிங்ஸ்டன்:சுண்டைக்காய் அணியான அயர்லாந்திடம் படு கேவலமாக தோல்வியுற்று உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது பாகிஸ்தான்.
உலகக் கோப்பைப் போட்டியில், தெற்காசிய கண்டத்திற்கு நேற்றைய தினம் கண்டம் போல. ஒரு போட்டியில் இந்தியா, வங்கதேசத்திடம்கேவலமாக தோற்றது. கிங்ஸ்டனில் நடந்த இன்னொரு போட்டியில், சுண்டைக்காய் அணியான அயர்லாந்து, பாகிஸ்தான் அணியை 3 விக்கெட்வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தே வெளியேற்றி விட்டது.
முதல் முறையாக உலகக்கோப்பைப் போட்டியில் ஆடும் அயர்லாந்து அணி முதல் போட்டியில் ஜிம்பாப்வேயுடன் மோதியது. அந்தப் போட்டியைசிறப்பாக ஆடி டை செய்தது.
2வது போட்டியில், வலிமை வாய்ந்த அணியான, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை சந்தித்தது. யாரும் எதிர்பாராத வகையில் தங்களது சிறப்பானபந்து வீச்சால் பாகிஸ்தானை ரன் எடுக்க விடாமல் திணறடித்த அயர்லாந்தைப் பார்த்து நேற்று உலகமே வியந்து போயிருக்கும்.
படு சிறப்பாக பந்து வீசிய அயர்லாந்து, 132 ரன்களில் பாகிஸ்தானை ஆல் அவுட் ஆக்கியது. பின்னர் அயர்லாந்து ஆடியபோது மழை குறுக்கிட்டது.மழை நின்ற பிறகு விளையாடிய அயர்லாந்து அணிக்கு 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த ரன்களை எளிதில்எடுத்து அபார வெற்றியைப் பெற்றது அயர்லாந்து.
![]() |
இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறக் கூடிய நிலையை நெருங்கி விட்டது. அதேசமயம், உலகக்கோப்பைப்போட்டியிலிருந்து பாகிஸ்தானையும் வெளியேற்றியுள்ளது.
முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடமும், 2வது போட்டியில் அயர்லாந்து அணியிடமும் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியுள்ளது.இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு இனி வேலை இல்லை.
புள்ளிகள் அடிப்படையில், அயர்லாந்து பாகிஸ்தானை விட முன்னணியில் இருப்பதால், அந்த அணியே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications