மாமன் மகனைக் கடத்த முயன்ற முறைப்பெண்!
சேலம்:காதலியை பதிவுத் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்த தனது முறை மாப்பிள்ளையை உறவினர்களுடன் வந்து அடித்து,இழுத்து, காரில் கடத்திச் செல்ல முயன்ற முறைப்பெண்ணான வழக்கறிஞரையும், அவரது உறவினர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் அருகே உள்ள சிவதாபுரம், நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. சொந்தத் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், மல்லூரைச் சேர்ந்த ஒருபெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஆனால் இந்தக் காதலுக்கு ராஜாவின் குடும்பத்தார் அனுமதி தரவில்லை. மேலும், முறைப் பெண்ணான வழக்கறிஞர் இந்திராணிக்கும், உனக்கும் தான்கல்யாணம் என்றும் ராஜாவிடம் கூறினர்.
ஆனால் ராஜா இதை ஏற்கவில்லை. இப்படியே விட்டால் சரிப்படாது, பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட வேண்டியதுதான் என்று முடிவு செய்தஅவர், பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பதிவுத் திருமணம் செய்வது கொள்வது குறித்த விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது இந்திராணி, ராஜாவின் தந்தை மணி மற்றும் இந்திராணியின் உறவினர்கள் 10 பேர் கார்களில் அங்கு வந்தனர். பதிவாளர் அலுவலகத்தில்நின்று கொண்டிருந்த ராஜாவை, சட்டையைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றனர்.
இதைப் பார்த்து பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜாவை இழுத்துச் சென்ற அவர்கள் காரில் ஏற்றி கடத்திச்செல்ல முயன்றனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அந்தக் கும்பலிடமிருந்து ராஜாவை மீட்ட அவர்கள், அவர் கொடுத்த புகாரின் பேரில்,இந்திராணி, மணி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறை மாப்பிள்ளையை முறைப் பெண் தனது உறவினர்களுடன் வந்து அடித்து, இழுத்துக் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பைஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications