ரசிகர்கள் கொந்தளிப்பு: டோணி வீடு சூறை
ராஞ்சி:வங்கதேசத்திடம் இந்திய அணி கேவலமாக ஆடி தோல்வியுற்றதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் டோணியின் வீட்டை 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.
உலகக் கோப்பைப் போட்டியில் சாதாரண வங்கதேச அணியிடம் இந்தியா தோற்றுப் போனதால் இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமும்,கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
![]() |
ஷேவாக், டிராவிட், சச்சின், டோணி உள்ளிட்ட முன்னணி வீரர்களின் போஸ்டர்களையும், கொடும்பாவிகளையும் எரித்து ரசிகர்கள் போராட்டம்நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள விக்கெட் கீப்பர் டோணியின் வீட்டை ரசிகர் கும்பல் ஒன்று தாக்கி சேதப்படுத்தியது.
டோனி தனது பெற்றோருடன் மெக்கான் காலனி பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த பாஜக ஆட்சியின் போது புதிதாக வீட்டு மனைவழங்கப்பட்டது. அந்த இடத்தில் டோணி தற்போது புதிய வீட்டைக் கட்டி வருகிறார்.
நேற்று அந்த இடத்திற்கு 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து டோணி தாக்கினர். அங்கிருந்த பொருட்களை எல்லாம் சூறையாடினர். வீட்டின்சுற்றுச் சுவரை உடைத்துத் தரை மட்டமாக்கினர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் ரசிகர்கள் அதற்குள் ஓடி விட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டோணியின் பெற்றோர்உள்ள வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வங்கதேசத்துடனான போட்டியில் டோணி ரன் ஏதும் எடுக்காமல் டக் ஆகி அவுட் ஆனது நினைவிருக்கலாம்.
இதேபோல நாடு முழுவதும் உள்ள பிற வீரர்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள ராகுல் டிராவிட், அணில்கும்ப்ளே, ராபின் உத்தப்பா ஆகியோரின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபமும் தற்போது ஷேவாக் மீதுதான் திரும்பியுள்ளது.
சுத்தமாக ஃபார்மில் இல்லாத அவரை அணியில் சேர்க்க பிடிவாதம் பிடித்த கேப்டன் ராகுல் டிராவிடைக் கண்டித்தும், அதற்கு ஒத்துழைத்தபயிற்சியாளர் கிரேக் சேப்பலும் உடனடியாக அவர்களது பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஷேவாக் உடனடியாக திருப்பி அனுப்பப்படவேண்டும் என ரசிகர்கள் ஆவேசமாக கூறுகிறார்கள்.
கொல்கத்தாவில் சேப்பல், டிராவிட், ஷேவாக் ஆகியோரின் கொடும்பாவிகளை ரசிகர்கள் எரித்து அதிருப்தியை வெளியிட்டனர். இதேபோலபோபால், வாரணாசி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்துள்ளன.
ஷேவாக்கின் தாயார் வேண்டுகோள்:
இதற்கிடையே, ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என ஷேவாக்கின் தாயார் கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார். எனது மகன் மீது ரசிகர்கள்நம்பிக்கை வைக்க வேண்டும். இந்தியா உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லும், அனைவரும் நம்பிக்கையோடு இருப்போம் என்று கூறியுள்ளார்அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications