காவிரி விவாதம்-தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு: லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி:மக்களவையில் இன்று காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்த விவாதம் நடத்த கர்நாடக எம்பிக்களுக்கு சபாநாயகர் அனுமதி அளித்ததையடுத்துதமிழக எம்பிக்கள் அவையின் மையப் பகுதியில் கூடி நின்று கோஷமிட்டனர். இதனால் பெரும் அமளி ஏற்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கர்நாடகம் கோரி வந்தது. இதுதொடர்பானமுயற்சிகளை முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தலைமையில் கர்நாடக எம்.பிக்கள் எடுத்தனர். சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியைச் சந்தித்துஇதுகுறித்து கோரிக்கையும் விடுத்தனர்.
தமிழக எம்பிக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். பட்ஜெட் உரை மீதான விவாதம் முடிந்த பின் காவிரிவிவாதத்திற்கு அனுமதி தருவதாக உறுதியளித்தார்.
இந் நிலையில், இன்று மாலை காவிரி தீர்ப்பு குறித்த விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று மாலை அவை கூடியதும் கர்நாடகஎம்.பிக்களை பேச அழைத்தார் சபாநாயகர்.
இதையத்து கர்நாடக பாஜக எம்பியான அனந்தகுமார் எழுந்து பேச ஆரம்பித்தார். உடனே தமிழக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து சபாநாயகர்இருக்கை முன் சென்று கோஷமிட்டனர். பதிலுக்கு கர்நாடக எம்.பிக்களும் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுஅமளி நிலவியது.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார்.தி
சமீபத்தில் மக்களவையில் தேவே கெளடா பேசிய பேச்சுக்கு தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு மாநில எம்.பிக்களுக்கும்இடையே சூடான விவாதம் நடந்து, சபை சில மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications