கருணாநிதியுடன் விரைவில் பேச்சு-குமாரசாமி
பெங்களூரு:காவிரி நதி நீர் பங்கீடு குறித்து விரைவில் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க இருப்பதாக கர்நாடகமுதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
நேற்று தமிழக முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு யுகாதி வாழ்த்துதெரிவித்தேன். அப்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பாக அவரை சந்தித்துப் பேசவிரும்புவதை தெரிவித்தேன். அவரும் சாதகமான பதில் தந்தார்.
இன்னும் 10 நாட்களுக்குள் முதல்வர் கருணாநிதியை சந்திக்கவுள்ளேன். இது போன்ற பிரச்சனைகளை பேசித்தான் தீர்க்க முடியும். கருணாநிதியை சந்திக்க கட்சி உறுப்பினர்களுடன் செல்வதா அல்லது நான் மட்டும் தனியாகசெல்வதா என்பது குறித்து கட்சி தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்.
பேச்சுவார்த்தை நடத்தினாலும் சட்டரீதியான போராட்டமும் தொடரும். அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா காவிரி விவகாரத்தில் எதிர்மறை போக்கை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பிரச்சனையை அரசியலாக்குவதும், இரு மாநில மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விடுவதும் சரியல்லஎன்றார் குமாரசாமி.












Click it and Unblock the Notifications