வைகோவுக்கு இது தேவையா: காங். கடுப்பு
சென்னை:காவிரிப் பிரச்சினையில் தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளது கண்டனத்துக்குரியது என்றுதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோது அதை முடித்துவைக்க வந்த வைகோ, தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை சீண்டி விட்டுச் சென்றுள்ளார்.
காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்பி, கூட்டணியில் இடம் பெற்று, காங்கிரஸுக்காக பிரசாரம் செய்து,தேர்தலை சந்தித்த வைகோ, இன்று மத்திய அரசு விரைவில் கவிழ்ந்து விடும் என்று ஆரூடம் கூறுகிறார்.
இது தேவையற்ற பேச்சு. காவிரிப் பிரச்சினையில் தற்போது ஜெயலலிதாவை ஆதரிக்கும் வைகோ, 2004ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி வெளியானமதிமுகவின் சங்கொலியில், காவிரி நீர் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவில்லை என்று ஜெயலலிதா எங்களைப் பார்த்துச் சொல்கிறார்.
நடுவர் மன்ற உத்தரவுக்கு கர்நாடகம் கட்டுப்படப் போவதில்லை என்று கூறி தமிழகத்துக்கு பச்சைத் துரோகம் செய்தவர் ஜெயலலிதா என்றுஎழுதியிருந்தார். அப்படிப்பட்டவர் இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.
முரண்பாட்டின் மொத்த உருவம்தான் வைகோ. அப்படிப்பட்ட அவர், காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசக் கூட அருகதை அற்றவர் என்று கூறியுள்ளார்கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications