பெர்முடாவை வீழ்த்தியது இந்தியா!413 ரன் குவித்து புதிய சாதனை!!
போர்ட் ஆப் ஸ்பெயின்:பெர்முடாவுக்கு எதிரான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 413 ரன்களைக் குவித்து புதிய உலக கோப்பை போட்டி சாதனையைப்படைத்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக ஆடினார் ஷேவாக்.
வங்கதேசத்துடன் மோசமாக ஆடி தோல்வியுற்ற நிலையில், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடர வேண்டுமானால், அடுத்துவரும் இரு போட்டிகளிலும் மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.இந்த நிலையில் முதலாவது போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினின் குவீன்ஸ் பார்க் மைதானத்தில் நடந்தது. குட்டி அணியான பெர்முடாவைஇந்தியா சந்தித்தது.
பெர்முடா கேப்டன் ரொமைன், டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்யப் பணித்தார். தொடக்க ஆட்டக்கார்ரகளாக ராபின் உத்தப்பாவும், செளரவ்கங்குலியும் இறங்கினர். வங்கதேச போட்டியில் சொதப்பிய ஷேவாக் மீது கேப்டன் டிராவிட் நம்பிக்கை வைத்து இந்தப் போட்டியிலும்சேர்த்திருந்தார்.
ராபின் உத்தப்பா 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வங்கதேச பீதி கிளம்பியது. இருந்தாலும்கங்குலியும், அவருடன் சேர்ந்த ஷேவாக்கும் பெர்முடாவை அடித்துத் துவைத்தெடுக்க ஆரம்பித்தனர்.
குறிப்பாக ஷேவாக் படு அபாரமாக ஆடி ரன்களை வேகமாக குவித்தார். மறுமுனையில் கங்குலி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். சிறப்பாகஆடி வந்த இவர்களைப் பிரிக்க பெர்முடா வீரர்கள் திணறித் தவித்தனர்.
ஷேவாக் ஆரம்பத்தில் அதிரடியாக ஆடினார் என்றால், கங்குலி பின்பகுதியில் பின்னி எடுத்து விட்டார். இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 202ரன்களைக் குவித்து, பெர்முடாவை மிரட்டினர்.
சிறப்பாக ஆடிய ஷேவாக் 114 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். கடந்த 2 ஆண்டுகளில் ஷேவாக் எடுத்துள்ள முதல் சதம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது. ஒரு நாள் போட்டிகளில் இது 8வது சதம். 87 பந்துகளில் இந்த சதத்தை எடுத்தார் ஷேவாக்.
மறு முனையில் கங்குலி 89 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்த டோணி, 29 ரன்களை மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால் யுவராஜ்சிங், மீண்டும் ஆட்டத்தில் வேகத்தைக் கூட்டி, விறுவிறுப்பாக ரன்களைச் சேர்த்தார். அபாரமாக ஆடிய யுவராஜ் 46 பந்துகளில் 83 ரன்களைக் குவித்துபட்டாசாக வெடித்தார்.
6வது வீரராக களம் இறங்கிய சச்சின் டெண்டுல்கர் விரைவாக ஆடி 57 ரன்களை சேர்த்து அணியின் ஸ்கோர் ஏற அணில் போல உதவினார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 413 ரன்களைக் குவித்தது இந்தியா. இது ஒரு புதிய உலகக் கோப்பை சாதனையாகும்.இதற்கு முன்பு 1996ம் ஆண்டு கண்டியில் நடந்த போட்டியில் இலங்கை அணி, கென்யாவுக்கு எதிராக 398 ரன்கள் எடுத்ததே உலகக் கோப்பைப்போட்டியில் ஒரு அணி எடுத்திருந்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.
இந்த 11 வருட கால சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இப்போட்டியில் இந்தியா மொத்தம் 18 சிக்சர்களை விளாசியது. இதில்யுவராஜ் சிங் 7, சச்சின் 4, ஷேவாக் 3, கங்குலி 2, டோணி, ராகுல் டிராவிட் 1 என ஆளாளுக்கு சிக்சர் அடித்தனர்.
பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ரன் ரேட் ஒவருக்கு 8.28 ஆக இருந்தது. இதுவரை எந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்தஅளவுக்கு ஒரு அணி அதிகபட்ச ரன் ரேட்டை வைத்ததில்லை. இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் களமிறங்கிய பெர்முடா அணி பெரிய ஸ்கோராச்சே என்று பயந்து விடாமல் தன்னம்பிக்கையுடன் இந்திய பந்துவீச்சை சந்தித்தது. மிக மிகபொறுமையாக ரன்களை சேர்த்த அவர்கள் 43.1 ஓவர் வரை நின்று சாதித்தனர்.
இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழன்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து 257 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. ரன் ரேட்டும் கூடியுள்ளது. அடுத்து இலங்கையுடனான போட்டியிலும்சிறப்பாக ஆடி நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால், சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முன்னேறுவது உறுதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications