அடுத்த டார்கெட் இலங்கை: டிராவிட்
போர்ட் ஆப் ஸ்பெயின்:பெர்முடாவுக்கு எதிரான போட்டியை வெல்ல வேண்டும் என்று நினைத்து விளையாடினோம், வென்று விட்டோம். அடுத்து இலங்கை அணியையும்இதேபோல சிறப்பாக ஆடி வெல்வோம் என்று இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
பெர்முடாவுடனா பேட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டிராவிட் பேசுகையில், பெர்முடாவுடான போட்டியில் எங்கள் அணி சிறப்பாகவிளையாடியது. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆட வேண்டும் என நினைத்தோம். அது நடந்து விட்டது.
அடுத்த போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறோம். இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறுவோம்.
வங்கதேச போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் எங்களுக்கு நெருக்கடி இருந்தது. அதை சமாளித்து இப்போட்டியில் சிறப்பாக வெல்ல வேண்டியஇக்கட்டான நிலையில் இருந்தோம். எங்களது வீரர்கள் ஒருங்கிணைந்து ஆடி அதை சிறப்பாக செய்து விட்டனர்.
குறிப்பாக வீரேந்திர ஷேவாக் தனது திறமையை நிரூபித்துள்ளார். எதிர்பார்த்ததை விட சிறப்பாக ஆடினார். நான் ஷேவாக்குக்கு ஆதரவாகஇருப்பதாக கூறுகிறார்கள், அது உண்மை அல்ல.
ஷேவாக் மிக சிறந்த வீரர். அவர் ஃபார்முக்குத் திரும்பி விட்டால் அணிக்கு மிக உதவியாக இருக்கும் என்பதால்தான் அவர் தேர்வு செய்யப்பட்டார்.தற்போது மீண்டும் ஃபார்முக்கு அவர் திரும்பியுள்ளார்.
வங்கதேச தோல்வியைத் தொடர்ந்து எங்களது கொடும்பாவிகளை ரசிகர்கள் எரித்துப் போராட்டம் நடத்தியதற்காக நாங்கள் வேதனைப்படவில்லைஎன்றார் டிராவிட்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications