ஜெ.வின் உண்மை இல்லாத விரதம்-கருணாநிதி
சென்னை:சென்னையில் ஜெயலலிதா இருந்தது, உண்மை இல்லாத வாதத்தை முன்வைத்து நடந்த உண்ணாவிரதம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேள்வி பதில் பாணியில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கேள்வி: ஜெயலலிதா இருந்தது ஒரு நாள் உண்ணாவிரதமா? ஒரு வேளை உண்ணாவிரதமா?
கருணாநிதி: ஒரு நாளா, ஒரு வேளையா என்பது முக்கியமல்ல. உண்மையல்லாத ஒரு வாதத்ததை முன் வைத்து, அதற்காக உண்ணாவிரதம்இருந்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் கூறிய உண்மைகளை விளக்கிய பிறகும் வேண்டுமென்றே உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.
கேள்வி: அதிமுக தலைவி தமிழகத்தில் திமுக ஆட்சி வீழும் என்றார். அவர் இருந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்த ஒருவரோ, மத்தியில் அடுத்தஆண்டுக்குள் ஆட்சி வீழும் என்று கூறியுள்ளாரே?
கருணாநிதி: பகல் கனவு காண யாருக்கும் உரிமை உண்டு.
கேள்வி: மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மதிமுக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டதே?
கருணாநிதி: அந்த கட்சியின் தலைவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளாமல் பிரதமர் பெருந்தன்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு.
கேள்வி: காவிரி பிரச்சினை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை?
கருணாநிதி: புள்ளி விவரங்களோடு ஆதாரங்களை நண்பர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். நடுவர் மன்ற தீர்ப்புக்கு கர்நாடகம் கட்டுப்படப்போவதில்லை என்று கூறி தமிழகத்திற்குப் பச்சைத் துரோகம் செய்தவர் ஜெயலலிதா என்று உண்ணாவிரதத்தை முடித்து வைத்தவரது ஏட்டிலேவெளிவந்த செய்தியையே எடுத்துக் காட்டியிருக்கிறார்.
2002ம் ஆண்டு திருத்தப்பட்ட நதி நீர் தாவா சட்டப் பிரிவின் படி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்ட பிறகு அதை எதிர்த்துயாரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய எந்த உரிமையும் இல்லை என கூறப்பட்டுள்ளதையும் அவர் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
ஜெயலிலதாவின் விருப்பப்படி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு விட்டால், அதன் பிறகு நமக்குள்ள குறைபாடுகளை தெரிவித்து மேல் முறையீடுசெய்ய வழியில்லாமல் போய் விடும்.
கேள்வி: பெரியாறு அணை அருகே புதிய அணை ஒன்று கேரள அரசின் சார்பில் கட்டபோவதாக வந்திருக்கும் செய்தி?
கருணாநிதி: கேரள நீர் வளத்துறை பொறியாளர்கள் குழு ஒன்று பெரியாறு அணைக்கும், வல்லக் கடவுக்கும் இடையில் உள்ள வனப்பகுதியில் புதியஅணை கட்டுவதற்கான இடம் குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும், அதற்கான திட்ட மதிப்பீடு ஒன்றை தயார் செய்திருப்பதாகவும் தகவல்கள்வந்துள்ளன.
பெரியாறு அணையிலிருந்து 1,300 அடி தூரத்தில் புதிய அணை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அங்கு அணை கட்ட ரூ. 216கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வநதுள்ளன. இதை மத்திய அரசு உடனடியாக கவனித்து பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டும்.
கேள்வி: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றி குடியரசு தலைவர் தெரிவித்துள்ள கருத்து குறித்து?
கருணாநிதி: தி.மு.க.வின் கருத்தைத்தான் குடியரசுத் தலைவரும் தெரிவித்துள்ளார். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக விளை நிலங்களுக்குபதிலாக தரிசு நிலங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் 15 கோடி ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு பயன்படாமல் தரிசாக கிடப்பதைஇந்த திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குடியரசு தலைவர் தெரிவித்திருப்பதுதான் திமுகவின் கருத்தும்.
கேள்வி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சரை தாக்க நடைபெற்ற முயற்சி பற்றி?
கருணாநிதி: கடந்த வாரம் மத்திய அமைச்சர் தம்பி டி.ஆர்.பாலுவை தாக்க நடைபெற்ற முயற்சியைத் தொடர்ந்து, நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தாக்கமுனைந்துள்ளனர். இது அநாகரீகம், இப்படியே தொடர்ந்தால் காட்டுமிராண்டித்தனத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications