வீரபாண்டியாருக்கு எதிராக போர்க்கொடி:திமுக-பாமக மோதல் வலுக்கிறது

Subscribe to Oneindia Tamil

சேலம்:அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏக்கள் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளனர். வீரபாண்டி ஆறுமுகம் தனது அமைச்சர்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க எம்.எல்.ஏக்கள் ஓமலூர் தமிழரசு, தாரமங்கலம் கண்ணையன், இடைப்பாடி காவேரி ஆகிய 3 பேரும்அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மதிவாணன் ஆகியோர் மீதும் சமீபத்தில் சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தனர்.

தங்களை அரசு விழாக்களில் புறக்கணிப்பதாகவும், நலத்திட்ட உதவிகளை திமுகவினருக்கு மட்டுமே வழங்குவதாகவும், இதற்கு மாவட்டஆட்சியாளர் உடந்தையாக இருப்பதாகவும் கூறினர்.

கூட்டணி கட்சியான திமுகவை, பாமக எம்.எல்.ஏக்கள் விமர்ச்சித்ததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகம் விளக்குகையில், மேற்கு மாவட்டங்களில் பா.ம.க வுக்கு முகவரி கொடுத்தது திமுக தான். பா.ம.க எம்.எல்.ஏக்கள் ஏதோஉள்நோக்கத்துடன் குற்றம் சாட்டுகின்றனர் என்றார்.

மாவட்ட ஆட்சியாளர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட நிர்வாகத்தில் அமைச்சர்களின் தலையீடு இல்லை. உண்மைக்குபுறம்பான இந்த குற்றசாட்டுகளை என் மீது கூறி வருவது கண்டிக்கத் தக்கது எனக் கூறியுள்ளார்.

அமைச்சர் மற்றும் ஆட்சித் தலைவரின் பேச்சால் சேலம் மாவட்ட பாமக கோபமடைந்துள்ளது. வீரபாண்டி ஆறுமுகம் உடனடியாக பதவி விலகவேண்டும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட் எம்.எல்.ஏக்களைக் கண்டிப்பதாக கூறும் ஆட்சித் தலைவருக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது என்றுஅவர்கள் காட்டமாக கேட்டுள்ளனர்.

இதுகுறித்து 3 எம்.எல்.ஏக்களும் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட பயனாளிகள் தேர்வில் பல குளறுபடிகள்நடந்துள்ளது. இதற்கு ஆட்சித் தலைவரும் உடந்தையாக உள்ளார்.

இலவச தொலைக்காட்சி பெட்டிகள் வழங்க தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் சமூக நல ஆர்வலர்களை திமுகவினர் தேர்வு செய்து பட்டியல்கொடுத்தனர். இதற்கு ஆட்சியாளரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மக்களின் பிரச்சனைகளை எடுத்து சொல்ல மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமையும் கடமையும் இருக்கிறது. அரசின் தவறுகளை தோழமை கட்சிகள்எடுத்து சொல்லலாம், இடித்து கூட சொல்லலாம் என்று முதல்வரே கூறியுள்ளார். நாங்கள் எடுத்துதான் சொல்லியிருக்கிறோம்.

மாவட்ட நிர்வாகத்தில் பல குளறுபடிகள் நடப்பதாக நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஏற்கனவே 3 எம்எல்ஏக்களும், மாவட்ட பஞ்சாயத்துதலைவரும் இணைந்து கடிதம் கொடுத்துள்ளோம். அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பின்னர் நாங்கள் அவரை சந்தித்த போது ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதை தவிர வேறு வழி இல்லை என்று கூறியதற்குதான் முதல்வரிடம் முறையிடுவதாக கூறினார்.

இப்போது நாங்கள் பொய் சொல்வதாக கூறுகிறார். என்ன பொய் நாங்கள் கூறினோம் என்பதை அவர் விளக்க வேண்டும். குளறுபடிகள்நடந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நாங்கள் உண்மை பேசியதால் எங்கள் தலைமை எங்களைகண்டிக்கவில்லை.

பாமகவுக்கு மேற்கு மண்டலத்தில் முகவரியைக் கொடுத்தது திமுக என்கிறார் வீரபாண்டியார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நாமக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பலமுறை நாங்கள் தனித்து நின்று வென்றுள்ளோம். 1991ல் எடப்பாடி, பென்னாகரம், தாரமங்கலம்தொகுதிகளில் தனித்து நின்று வென்றுள்ளோம். அதுபோல வீரபாண்டியார் தனித்து நின்று போட்டியிடத் தயாரா? சேலத்தில் ஏதாவது ஒருதொகுதியில் நின்று காட்டட்டுமே!

மாவட்டப் பிரச்சினையை மாநிலப் பிரச்சினையாக்க முயலுகிறார் வீரபாண்டியார். அதேபோல சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களைகண்டிப்பதாக கூறியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை கண்டிக்கும் அதிகாரத்தை ஆட்சித் தலைவருக்கு யார் கொடுத்தது?இதை நாங்கள் சட்டசபையில் பிரச்சினையாக எழுப்புவோம்.

விரைவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணியை சந்தித்து சேலம் மாவட்டத்தில் அரசு சலுகைகள் வழங்குவதில் நடைபெறும்முறைகேடுகளை விளக்குவோம் என்று தெரிவித்தனர்.

அமைச்சர் மீதும், ஆட்சித் தலைவர் மீதும் பாமக எம்.எல்.ஏக்கள் மீண்டும் குற்றம் சாட்டியிருப்பதும், வீரபாண்டி ஆறுமுகம் ராஜினாமா செய்யவேண்டும் என கடுமையான கோரிக்கை வைத்திருப்பதும் பூசலை அதிகப்படுத்தியுள்ளது.

மேலிட அளவில் திமுக, பாமக இடையிலான விரிசலை மேலும் அதிகப்படுத்துவே இது உதவும் என்று கூறப்படுகிறது. சட்டசபைக் கூட்டத் தொடர்தொடங்கவுள்ள நிலையில் பாமக உயர்த்தியுள்ள இந்த போர்க்கொடியால், சட்டசபையில் பூகம்பம் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+