தமிழகத்தில் விரைவில் 5,000 போலீஸார் நியமனம்
வெேலூர்: தமிழகத்தில் உடனடியாக 5,000 போலீஸார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி கூறியுள்ளார்.
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முகர்ஜி பேசுகையில்,
தமிழகத்தில் 98,000 போலீஸ் பணியிடங்கள் உள்ளன. இதில் 12,000 காலியிடங்கள் உள்ளன. இம் மாதம் 30ம் தேதி முதல் 736 எஸ்ஐகளை தேர்வு செய்ய தேர்வு நடக்கிறது. இதைத் தொடர்ந்து 5,000 போலீஸார் தேர்வு செய்யப்படவுள்ளனர். கருணை அடிப்படையில் வேலை கோரி 1,500 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அதில் தேர்வு செய்யப்படுபவர்களை அமைச்சுப் பணிகளில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், அவர்களில் சிலர் காவலர் பதவிக்குரிய தகுதியை பெற்றிருந்தால் அந்த பணியில் அமர்த்தப்படுவர். கடலூர் மாவட்ட கடற்கரை ஓரங்களில் 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு திட்டப்படி தமிழகத்தில் 12 கடலோர காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, சிலவற்றுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல், 12 புறக்காவல் நிலையங்களும், கூடுதலாக 40 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படும். இதோடு சேர்த்து மொத்தம் 100 சோதனைச் சாவடிகள் உள்ளன. கடலோர பாதுகாப்பு பணிக்கு மத்திய அரசு 2 படகுகளை வழங்கவுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications