ஈராக் முன்னாள் துணை அதிபர் தூக்கிலிடப்பட்டார்
பாக்தாத்:சதாம் உசேனின் ஆட்சிக்காலத்தில் துணை அதிபராக இருந்த தாஹா யாசின் ரமதான் இன்று காலை தூக்கிலிடப்பட்டார் என்று அவரது மகன்தெரிவித்துள்ளார்.
ஈராக் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சதாம் உசேன் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அவரது தம்பி மற்றும் முன்னாள் நீதிபதி ஆகியோருக்கு சமீபத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
![]() |
இவர்கள் தவிர முன்னாள் துணை அதிபர் ரமதானுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனையை அப்பீல் நீதிமன்றம் சமீபத்தில்உறுதி செய்தது.
இதையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை ரமதான்தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.
இதை ரமதானின் மகன் அகமத் ரமதான், அல் ஜஸீரா டிவிக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், எனது தந்தையை ஈராக்அரசு கொன்று விட்டது. இது தண்டனை அல்ல, படுகொலை. எனது தந்தையின் உடல், சதாம் உசேன் உள்ளிட்ட மற்றவர்கள் அடக்கம் செய்யப்பட்டஇடத்திற்கு அருகேயே அடக்கம் செய்யப்படும் என்றார் அகமது ரமதான். அவர் தற்போது ஏமன் தலைநகர் சானாவில் தங்கியுள்ளார்.
துஜைல் நகரில் கடந்த 1980களில் 148 ஷியா முஸ்லீம்களைக் கொன்ற வழக்கில் ரமதானும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இதே வழக்கில்தான்சதாமுக்கும், மற்ற இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ரமதான். 1956ம் ஆண்டு பாத் கட்சியில் இணைந்தார். 1968ம் ஆண்டு நடந்த புரட்சியில் சதாமுடன்இணைந்து பங்கேற்றார்.
கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொசூல் நகரில் குர்திஷ் புரட்சிப் படையினர் ரமதானை சிறை பிடித்து அமெரிக்க படைகளிடம்ஒப்படைத்தனர்.
ரமதான் தூக்கிலிடப்பட்டது குறித்து ஈராக்கிய அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் இன்று ரமதான்தூக்கிலிடப்படுவார் என்று நேற்றே ரமதானின் வழக்கறிஞர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications