குடத்தை வீசி பைக் திருடர்களை அமுக்கிய பெண்
தக்கலை: தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து செயின் பறித்த திருடர்களை, குடத்தை வீசி மடக்கினார் துணிச்சல்கார பெண் ஒருவர். இதையடுத்து அந்த திருடர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
![]() |
| தூக்கி வீசிய குடத்துடன் ஜெசிந்தா |
அதிகாலை திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த மோகனன் என்ற கவுன்சிலரின் மனைவி ஷீலா (35) வீட்டருகே உள்ள குடிநீர் பைப்பிலிருந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஷீலாவின் கழுத்தில் கிடந்த நான்கு பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர்.
![]() |
| செயின் பறி கொடுத்த ஷீலா |
ஷீலா கூச்சலிட்டதையடுத்து அவரது கணவரும் மற்றவர்களும் வேறு மோட்டார் சைக்கிள்களில் திருடர்களை துரத்திச் சென்றார். ஆனால், அவர்களை பிடித்த முடியவில்லை.
இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அதே திருடர்கள் பள்ளியாடி என்ற இடத்திலும் தங்கள் கைவரிசையை காண்பித்தனர். செல்வராஜ் என்பவரின் மனைவி லிண்டா ஜெசிந்தா (39) குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு திரும்பியபோது அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு திருடர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பினர்.
![]() |
| திருடர்கள் பயன்படுத்திய பைக் |
அப்போது தன்னிடமிருந்த தண்ணீர் நிரம்பிய குடத்தை தூக்கி மோட்டார் சைக்கிள மீது வீசினார் ஜெசிந்தா. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் இருவரும் கீழே விழுந்தனர். தப்பியோடிய அவர்களை அப் பகுதி பொது மக்கள் விரட்டிப் பிடித்து தர்ம அடி தந்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருடர்களின் மோட்டார் சைக்கிளில் முன் புறம் கேரள பதிவு எண்ணும் பின் பக்கம் தமிழக பதிவு எண்ணும் இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?















Click it and Unblock the Notifications