கலைஞர் இயற்றிய பெஸ்ட் கவிதை
சென்னை:கலைஞர் கருணாநிதி இயற்றிய கவிதைகளிலேயே தலை சிறந்த கவிதை கனிமொழிதான் என்று கவிஞர் வாலி கூறியுள்ளார்.
சென்னையில் சங்கமம் கலைநிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்காக கவிஞர் கனிமொழிக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. பிரம்மகான சபாநடத்திய இந்தப் பாராட்டு விழாவில் கவிஞர் வாலி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டு கனிமொழியைப் பாராட்டிப் பேசினர்.
வாலியின் பேச்சுதான் இதில் ஹைலைட்டாக இருந்தது. வாலி பேசுகையில், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞர் கலைஞர். அவர் இயற்றியகவிதைகளிலேயே தலை சிறந்த கவிதை கனிமொழி.
![]() |
பாராட்டுக்கும், கெளரவத்திற்கும் 100 சதவீதம் தகுதியானவர் கனிமொழி. எளிமையானவர், புலமை மிகுந்தவர். கனிமொழியை உளப்பூர்வமாகநான் பாராட்டுகிறேன்.
சமீபத்தில் இளையராஜாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு பாட்டைப் போட்டுக் காட்டினார். எந்தப் படத்தில் இந்தப் பாட்டு வருகிறதுஎன்றேன். அதற்கு அவர், தனி சிடி என்றார். யார் எழுதியது என்று கேட்டபோது கனிமொழி என்றார். ஆச்சரியப்பட்டுப் போனேன்.
![]() |
கனிமொழி கலைஞரின் புதல்வி, வருங்கால தமிழ் மண்ணின் முதல்வி. நாணயமான பெண் ஆளும் நிலை வர வேண்டும். மண்ணின் ஆளுமைக்குநாடு எதிர்பார்த்தால், அதற்குத் தகுதியானவர் கனிமொழி என்றார்.
கனிமொழி ஆற்றிய ஏற்புரையில், சங்கமம் நான் மட்டும் எடுத்துச் செய்த முயற்சி அல்ல.போற்றுதல்கள் எனக்கும், தூற்றுதல்கள் ஜெகத்கஸ்பாருக்கும்(தமிழ் மையத்தின் இயக்குநர்) போய்ச் சேர்ந்தது.
ஊர் கூடி தேர் இழுக்கும்போது ஒருவர் மட்டும் பெயர் எடுப்பார். சென்னை சங்கமத்திற்காக உழைத்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால்பாராட்டுவது என்னை மட்டும்தான். அதனால் அச்சத்தோடும், கூச்சத்தோடும் கேட்கும் நிலையில் உள்ளேன்.
இந்த நிகழ்ச்சியை ஜெயிக்க வைத்தவர்கள் மக்கள்தான் என்றார் கனிமொழி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!














Click it and Unblock the Notifications