ராமர் பாலம்: இந்து மத பிரதிநிதிகளுடன் டி.ஆர். பாலு ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ராமர் பாலம் தொடர்பாக எழுந்த பிரச்சனை குறித்து மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு இந்து மத பிரதிநிதிகளுடன்பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேது சமுத்திர திட்ட பணிகாரணமாக ராமர் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்து மத பிரிதிநிதிகள் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து டி.ஆர்.பாலு, அமைச்சர் சுரேஷ்பச்சோரி ஆகியோர் இந்து மத ஆச்சாரியார்கள் மற்றும் சங்கராச்சாரியார்களின் பிரதிநிதிகள் குழுவினரை சந்தித்து பேசினர்.

சேது சமுத்திர திட்ட பணிகள் குறித்து அவர்களிடம் பாலு விளக்கி கூறினார். காலப்போக்கில் கடலுக்கு அடியில் மணல் திட்டுகளால் உருவானதேஆதம் பாலம் (ராமர் பாலம்) என்று சிறப்பு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

ராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கோவில்களின் நிர்வாகிகள், மன்னார் வளைகுடா கடல் பூங்கா நிர்வாகிகள் போன்ற பல்வேறுஅமைப்புகளுடன் விரிவாக விவாதித்த பிறகு தான் சேது சமுத்திர திட்டம் இறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சேது சமுத்திர திட்டத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான என்.கே.ரகுபதி பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் அறிவியல் மற்றும்தொழில் நுட்ப ஆய்வுகள் மூலம், சேது சமுத்திரப் பணி திட்டப் பகுதியில், மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லைஎன்பதை ஆவணங்களுடன் எடுத்து கூறினார்.

இதையடுத்து இந்து தர்ம ஆச்சாரியா சபை செயலாளர் சுவாமி பரமானந்த சரஸ்வதி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், இத் திட்டத்துக்குஆதரவளிப்பதாக தெரிவித்தனர். மேலும் இத்திட்டப்பணியின் போது மக்களின் கவலைகள் மற்றும் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்றுஅவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சேது சமுத்திர திட்டப் பணிகளை நிறைவேற்றும் போது எந்த சூழ்நிலையிலும் மக்களின் மத உணர்வுகளுக் பாதிப்பு ஏற்படாமல் அரசுபார்த்துக்கொள்ளும் என்று டி.ஆர்.பாலு அவர்களிடம் உறுதி அளித்தார். மேலும் சேது சமுத்திர திட்டப்பணிகளை நேரில் வந்து பார்வையிடும்படியும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+