புறாவுக்காக தந்தையை கொன்ற மகன்!
சென்னை:புறா வளர்க்க ரெடி செய்திருந்த அறையில் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், தனது தந்தையை சரமாரியாககுத்திக் கொன்ற கொடூரம் சென்னை அருகே நடந்துள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதியான கீழ்க்கட்டளையில் வசித்து வந்தவர் பரமசிவம் (60). இவரது மகன் ராஜபாண்டியன்.
பரமசிவம் தனது வீட்டின் பின்பக்கம் இருந்த, பயன்படாமல் இருந்த குளியலறையில் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். அப்போது அங்குவந்த ராஜபாண்டியன், இங்கு நான் புறா வளர்க்க உள்ளேன். எனவே இங்கு விறகுகளை வைக்காதீர்கள் என்று தந்தையிடம் கூறியுள்ளார்.
ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பரமசிவம் விறகுகளை அடுக்கியுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ராஜபாண்டியன், வீட்டில்இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தை என்றும் பாராமல், சாதாரண புறாவுக்காக, பெற்றெடுத்த தந்தையை சரமாரியாக குத்தினார்.
பரிதாபத்துக்குரிய அந்தத் தந்தை அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். விரைந்து வந்த போலீஸார் ராஜபாண்டியனைக் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, எனக்கு அப்பாவை சின்ன வயதில் இருந்தே பிடிக்காது. எப்போது பார்த்தாலும் என்னுடன்சண்டை போட்டுக் கொண்டிருப்பார். குறை கூறிக் கொண்டிருப்பார்.
எனக்குக் கல்யாணம் ஆன பிறகு எனது மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். எங்களைப் பற்றி மற்றவர்களிடம் குறை கூறிக்கொண்டிருப்பார்.
இந்த நிலையில்தான், எனது வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருந்த குளியலறையில், புறா வளர்க்கலாம் என நினைத்திருந்தேன். அருகில் செடியும்வைத்திருந்தேன். விறகுகளை அடுக்காதீர்கள் என்று கூறியபோது அதைக் கேட்காமல், நான் வளர்த்து வந்த செடி மீது விறகுகளை வீசி அதைசேதப்படுத்தினார்.
இதனால்தான் ஆத்திரமடைந்து நான் எனது தந்தையைக் கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார் ராஜபாண்டியன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications