வெடிபொருட்களுடன் 3 நக்சலைட்டுகள் கைது
தஞ்சாவூர்:ஜெலட்டின் குச்சிகள், வெடிபொருட்கள் மற்றும் கத்திகளுடன் சென்ற தமிழ் மக்கள் இயக்கம் என்ற தடை செய்யப்பட்ட நக்சலைட் இயக்கத்தைச்சேர்ந்த 3 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் பொன்பரப்பியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவரும் தியாகராஜன் என்பவரும், தமிழ்நாடு விடுதலைப் படை என்ற தடைசெய்யப்பட்ட நக்சலைட் அமைப்பிலிருந்து பிரிந்து, தமிழ் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.
இயக்கம் நடத்த போதிய பணம் இல்லாததால், மார்வாடிக் கடைகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். இதற்காக கும்பகோணத்தை சேர்ந்தசக்திவேல் (27) என்பவரை கூட்ட சேர்த்துக் கொண்டனர்.
3 பேரும் சேர்ந்து கும்பகோணத்தில் உள்ள மார்வாடிடிகளின் அடகுக் கடைகளில் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர். இதை நிறைவேற்றவெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள், வயர்கள் மற்றும் 2 பெரிய கத்திகளுடன் மோட்டர் சைக்கிளில் திருச்சியிலிருந்து புறப்பட்டனர்.
3 பேரும் வெடிபொருட்களுடன் தஞ்சைக்கு வருவது பற்றி தஞ்சை கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சையில்கியூ பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகலில் வந்த 3 பேரையும் மடக்கிப் பிடிக்க போலீஸார் வழி மறித்தனர். ஆனால் போலீஸாரை ஏமாற்றி விட்டுத் தப்பிச் செல்லமுயன்றபோது போலீஸார் 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, மார்வாடி கடைகளில் கொள்ளை அடிப்பதற்காக சென்றதை ஒப்புக் கொண்டனர். பின்னர்இவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து வெடிபொருட்களையும், ஜெலட்டின் குச்சிகள், வயர், கத்திகள் போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு, துப்பாக்கிவைத்திருந்த வழக்கு, வேப்பேரியில் பள்ளி பேருந்துக்கு குண்டு வைத்த வழக்கு, பெரம்பலூர் கடத்தல் வழக்கு போன்ற பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications