கர்நாடகத்தின் சூழ்ச்சி: நெடுமாறன் எச்சரிக்கை
சென்னை:காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தின் சதி வலையில் தமிழக முதல்வர் கருணாநிதி சிக்கி விடக் கூடாது என்று தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக கர்நாடக முதல்வர்அறிவித்துள்ளார். இதற்கு முதல்வரும் சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதுபோல பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்தும் தந்திரத்திலும், புதிய அணைகள் கட்டுதல், பாசன பரப்பை விரிவாக்குதல் போன்றநடவடிக்கைகளிலும் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சரால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் நடுவர் மன்றத் தீர்ப்பை முழுமையாக ஏற்க மறுத்து விட்டது. இந்த சூழ்நிலையில்பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.
கர்நாடகத்தின் சூழ்ச்சி வலையில் மீண்டும் சிக்க வேண்டாம் என தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறேன். பேச்சுவார்த்தை நடத்துவதாகஇருந்தால் அந்த கால கட்டம் வரை நடுவர் மன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பினை மதித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் இக்காலக் கட்டத்தில்தனது பாசன வசதிகளை விரிவாக்குவது இல்லை என்றும் கர்நாடகம் வாக்குறுதி அளித்தால் மட்டுமே அவர் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications