54 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பாச சந்திப்பு!
பதேகர் சாஹிப் (பஞ்சாப்):இந்தியாவில் உள்ள தனது தங்கையை 54 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து அவருடன் இணைந்துள்ளார் ரானா யாசின் அகமது கான் என்கிறபாகிஸ்தான் முதியவர்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், குஜ்ரன்வாலாவில் வசிப்பவர் ரானா யாசின் அகமது கான். இவருக்கு தனது தங்கை முக்தியார் கெளர்என்பவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பதேகர் சாஹிப் மாவட்டம் பர்வாலி குர்த் என்ற கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியைக் காண பஞ்சாபுக்கு கிளம்பி வந்தார். முக்தியார் கெளர் வீட்டை அடைந்த அவர்,நான்தான் உனது அண்ணன் என்று கூறியுள்ளார்.
சினிமாவில் வருவது போல திடீரென ஒருவர் வந்து நான் உனது அண்ணன் என்று கூறியதால், அதிர்ச்சி அடைந்த முக்தியார் கெளர், எனக்குசகோதரன் யாரும் கிடையாது என்று கூறி ரானாவை திருப்பி அனுப்பி விட்டார்.
இதனால் சோகத்துடனா ரானா பாகிஸ்தான் திரும்பி விட்டார். அவர் போன பின்னர் முக்தியாருக்கு ஏதோ உறுத்தியுள்ளது. உண்மையிலேயே இப்படிஒரு சகோதரன் நமக்கு உள்ளாரா என்பதை அறிய அவர் ஆவல் கொண்டார்.
இதையடுத்து தனது குடும்பத்தின் பூர்வீகம் குறித்து விசாரித்துப் பார்த்தார். அப்போது அவருக்குக் கிடைத்த தகவல்கள் அவரை மெய் சிலிர்க்கவைத்தன.
முக்தியாரின் தந்தை பெயர் உகர் சிங். அவர் பஞ்சாபி ஜாட் இனத்தைச் சேர்ந்தவர். அவர் சுக்ரா பீபி என்ற முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் சுக்ரா பீபியின் பெயர் தலிப் கெளர் என மாற்றப்பட்டது. இது இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்புநடந்தது.
நாடு இரண்டாக பிளவுபட்டு ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில், அடிப்படையில், முஸ்லீம் பெண் என்பதால், தலிப் கெளர் ஊரில் இருப்பதற்கு சிலஎதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து வயிற்றில் குழந்தையுடன் (அவர்தான் ரானா) தலிப் கெளர், தனது பெற்றோருடன் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச்சென்றார். தலிப்பும், உகர் சிங்கும் பிரிந்தனர்.
பின்னர் 1953ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி ரானா பிறந்தார். தனது தாய் சொல்லித்தான், தனது தங்கை குறித்த தகவல் ரானாவுக்குத் தெரிய வந்தது.தாயார் இறந்தவுடன் அவர் இந்தியாவுக்கு வந்து தனது தங்கையை சந்திக்க விரும்பினார். ஆனால் அதற்கான நேரம் அமையவில்லை.
இந்த நிலையில்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்து முக்தியார் கெளரை சந்தித்தார். ஆனால் அவருக்கு ரானா குறித்தத் தகவல் தெரியாததால் சந்திக்கமறுத்து விட்டார்.
தற்போது ரானா தனது அண்ணன்தான் என்பதை முக்தியார் அறிந்து கொண்டார். இதையடுத்து அவருக்குள் பாச ஊற்றுப் பெருக்கெடுத்தது.உடனடியாக பாகிஸ்தான் கிளம்பிச் சென்று ரானாவை சந்தித்து நான் உங்கள் தங்கைதான், நீங்கள் எனது அண்ணன்தான் என கண்ணீர் மல்கதெரிவித்தார்.
நமது பூர்வீக ஊருக்கு வாருங்கள் என்றும் ரானாவை அழைத்தார். நெகிழ்ச்சி அடைந்த ரானாவும் மீண்டும், தனது தந்தையின் பூர்வீக ஊருக்குகிளம்பி வந்தார்.
இம்முறை ரானாவுக்கு செமத்தியான மரியாதை கிடைத்தது. ஊரே கூடி அவரை உற்சாகத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றது. அந்த ஊர்பெரியவர்கள், உகர் சிங்கையும், தலிப் கெளரையும் வாயார பாராட்டினர். தலிப் கெளரின் மகனா நீ என்று ஆச்சரியத்துடனும், வாஞ்சையுடனும்ரானாவை கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டனர்.
தற்போது 20 நாள் விசாரவில் ரானா தனது தந்தை பிறந்த ஊருக்கு வந்துள்ளார். விரைவில் தனது குடும்பத்தினரையும் தனது தந்தையின் ஊருக்குஅழைத்து வரத் திட்டமிட்டுள்ளாராம்.
கிட்டத்தட்ட 54 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே பிரிந்து விட்ட பாகிஸ்தான் வாழ் அண்ணனும், இந்தியாவில் பிறந்ததங்கையும் ஒன்று சேர்ந்துள்ள சம்பவம் பஞ்சாப் மக்களுக்கு பெரும் வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications