பைக் மோதியதில் தகராறு: வாலிபர் கொலை
திருப்பூர்:திருப்பூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்த முயன்ற நபரை பொதுமக்கள் அடித்தே கொன்றனர்.
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியைச் சேர்ந்த சுகுமாறன் (28) என்பவர் திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவுசுகுமாறன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே மோட்டர் சைக்கிளில் தன் தாயாருடன் வந்துக் கொண்டிருந்த சண்முகநாதன்(45) மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டார்.
இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுகுமாறன், தான் வைத்திருந்த கத்தியால் சண்முகநாதனையும் அவரதுதாயாரையும குத்த முயன்றார்.
இதில் சண்முகநாதனுக்கு தொடை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் வெகுண்டெழுந்து சுகுமாறனை பிடிக்கமுயன்றனர். ஆனால் சுகுமாறன் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டினார்.
ஆனால் சிலர் துணிந்து சுகுமாறனை மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர்களை சுகுமாறன் கத்தியால் குத்த முயன்றார். கோபமடைந்த பொதுமக்கள்சுகுமாறனை சரமாரியாக தாக்கியதால் அவர் மயங்கி விழுந்தார்.
விரைந்து வந்த போலீஸார் சுகுமாறனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
சுகுமாறனால் தாக்கப்பட்ட சண்முகநாதனையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications