நாகை-ரூ10000 கோடி முதலீட்டில் மின் நிலையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டில் மின் நிலையமும், துறைமுகமும் அமைக்க அயர்லாந்து நிறுவனத்துடன் தமிழக அரசுஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மெக்னமாரா இண்டர் நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற அயர்லாந்தைச் சேர்ந்தகட்டுமானத் தொழில் நிறுவனம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 2,000 மெகாவாட் திறன் கொண்ட வணிகநோக்கிலான மின் நிலையம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசின் உதவியுடன் காரப்பிடாகை, கீழப்பிடாகை ஆகிய கிராமங்களுக்கு இடையே இந்த மின் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

இம்மின் நிலையம் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை எரிபொருளாக கொண்டு செயல்படும். இந் நிலக்கரி இறக்குமதிக்காக நாகப்பட்டினம்மாவட்டம், புதுப்பள்ளி வாய்க்கால் மற்றும் ஹரிச்சந்திரா நதி ஆகியவற்றிற்கிடையே வேட்டைக்காரன் இருப்பு கிராமத்தின் அருகில்கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் ஒரு துறைமுகத்தை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுகத்திற்கான திட்டச் செலவு தோராயமாக ரூ. 750 கோடியாகும்.இந்த நிறுவனம், தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் தமிழக அரசினை அணுகி முதனிலை கருத்து ஒன்றினை சமர்ப்பித்து மேற்கண்டதிட்டத்திற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக கொள்கையளவிலான ஒப்புதல் வழங்கும்படி கோரினர்.

இத்திட்டத்தினை 3 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் 2,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், சுமார் 5,000 பேருக்கு மறைமுக வேலை வாயப்பும் கிடைக்கும்.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்திடப்பட்டதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+