உணவு பற்றாக்குறையில் தமிழ் அகதிகள்-ஐ.நா.
ஜெனீவா:கிழக்கு இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள தமிழர்களுக்கான உணவு இருப்பு வேகமாக காலியாகி வருவதாகவும், ஏப்ரல் மாதம் வரைதான் உணவுப்பொருட்களை வழங்க முடியும் என்றும் ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டை காரணமாக கிட்டத்தட்ட 1லட்சத்து 55 ஆயிரம் தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு இவர்கள் உணவு பொருட்களை விநியோகித்து வருகின்றனர்.
அரசு மற்றும் ஐ.நா. சபை அதிகாரிகள் அமைத்துள்ள அகதிகள் முகாம்கள் நிரம்பி வழிகின்றன. உணவுப் பொருட்களுக்கு அங்கு பெரும்பற்றாக்குறை நிலவுகிறது. சுகாதாரம் படு மோசமாக உள்ளது. நோய்களும் பரவுகின்றன. மிகப் பெரிய மனித உதவி நெருக்கடி அங்கு நிலவுவதாகஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ல முகாம்களில் மட்டும் 60 ஆயரிம் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல பிற மாவட்டங்களில் 3லட்சம் பேர் தங்கியுள்ளனர்.
உலக உணவுத் திட்ட செய்தித் தொடர்பாளர் சிமோன் பிளூஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், உணவு இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.ஏப்ரல் மாதத்திற்குள் தற்போது உள்ள இருப்பு காலியாகி விடும். அதன் பின்னர் நிலைமையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றுதெரியவில்லை.
நிதிப் பற்றாக்குறை காரணமாக எங்களது பல திட்டங்களை நாங்கள் ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளோம். சண்டை நடக்கும் பகுதிகளில்பாதிக்கப்பட்டவர்களை அணுக முடியாத அளவுக்கு எங்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து தடைகள் போடப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் நாங்கள்கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications