திமுக அவதூறு வழக்கு: விஜயகாந்த் ஆப்சென்ட்
சென்னை:திமுக பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, கல்யாண மண்டபம், வீடு உள்ளிட்ட இடங்களில் சிலமாதங்களுக்கு முன்பு வருமானவரி சோதனை நடந்தது.
முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலால் தான் வருமானவரிச் சோதனை நடைபெற்றது என குற்றம் சாட்டி மாலை முரசு நாளிதழில் பேட்டி கொடுத்தார்விஜயகாந்த். இதையடுத்து விஜயகாந்த் மீதும், மாலை முரசு இதழ் மீதும் ஆற்காடு வீராசாமி, எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பூதநாதன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி விஜயகாந்திற்கு சம்மன் அனுப்பினார். இதையடுத்து விஜயகாந்த் நேரில்ஆஜரானார்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் மணிமாறன்,விஜயகாந்த் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதால் அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை. ஆகவேவிசாரணையை 3 வாரத்திற்கு பிறகு தள்ளி வைக்குமாறு கூறினார்.
இதற்கு ஆற்காடு வீராசாமி தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏப்ரல் 2ம் தேதிதள்ளிவைத்தார். அன்று விஜயகாந்த் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications