பற்றி எரியும் வாகனங்கள்-சென்னையில் பரபரப்பு
சென்னை:சென்னை நகரில், கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம், தெருவோரம் நிறுத்தப்பட்டுள்ளவாகனங்கள் மர்மமான முறையில் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோடம்பாக்கம், விருகம்பாக்கம், வடபழனி, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் வீட்டு முன்பு, சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் கடந்த சிலநாட்களாக சில விஷமிகளால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களில் மட்டும் 3 கார்கள், 13 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. மீண்டும் பயன்படுத்தவே முடியாத அளவுக்குஇவை எரித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தொடரும் இந்த செயலால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வாகனங்களை வெளியில் நிறுத்துவே மக்கள் அஞ்சுகிறார்கள்.
இதுதொடர்பாக காவல்துறைக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர இரவு ரோந்துக்கு காவல்துறைஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார்.
இந்த படையினரின் தீவிர ரோந்துக்கு இடையிலும் நேற்று இரவு 2 லாரிகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. அசோக் நகரில் இந்த அக்கிரமம்நடந்துள்ளது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார், லாரி எரிந்தது எப்படி என்று விசாரிப்பதற்குப் பதில் எரிந்த லாரியை மறைவிடத்தில் பதுக்கி வைக்குமாறுலாரி உரிமையாளரை நிர்ப்பந்தப்படுத்தினராம்.
இந்த தொடர் தீவிபத்துக்கள் குறித்து போலீஸார் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக இது போன்ற தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.விஷமிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்ட யாரேனும் இப்படிச் செய்திருக்கக் கூடும் என்று கருதி, 200 பேரை விசாரித்தோம்.
சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் மர்ம கும்பல் ஒன்று வாகனத்திற்கு தீ வைத்ததாக தெரிவித்தனர். இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளவர்கள்விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications