கண்ணீருடன் விடைபெற்றார் இன்சமாம்
கிங்ஸ்டன்:இன்ஸி என கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நேற்று கண்ணீர் மல்க விடை பெற்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த சிறந்த கேப்டன்களில் இன்சமாமும் ஒருவர். சிறந்த வீரரான இன்சமாமின் கேப்டன் பதவிக்காலம் முள்பாதையாகவே இருந்தது.சக வீரர்களுடன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய இன்சமாமின் கிரிக்கெட் வாழ்க்கை, பயிற்சியாளர் பாப் உல்மரின் மர்ம மரணம், உலகக்கோப்பைப்போட்டியிலிருந்து பாகிஸ்தான் அசிங்கப்பட்டு வெளியேறியது ஆகிய சோகச் சுவடுகளுடன் முடிவுக்கு வந்துள்ளது.
37 வயதாகும் இன்சமாம் நேற்று நடந்த ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் போட்டியுடன் தனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
1991ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாட ஆரம்பித்த இன்சமாம் இதுவரை377 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 11,702 ரன்களைக் குவித்துள்ளார். பத்து சதம், 83 அரை சதங்களை எடுத்துள்ளார்.
1992ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பிரிமிங்காமில் மோதிய டெஸ்ட் போட்டிதான் இன்சமாமின் முதல் டெஸ்ட் போட்டி. 119டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இன்சமாம், 8,813 ரன்களைக் குவித்துள்ளார். 25 சதங்கள், 46 அரை சதங்களை எடுத்துள்ளார்.
வலது கை ஆட்டக்காரான இன்சமாம், ரன் அவுட் ஆவதில் சாதனை படைத்தவர். ஸ்டைலான பேட்டிங் திறமையுடன் கிரிக்கெட் உலகில் ஜொலித்தஇன்சமாம், ஓய்வு பெற்றிருப்பது பாகிஸ்தான் அணிக்கு சற்றே பலவீனமா ஒன்றுதான்.
நேற்றைய கடைசிப் போட்டியில் பேட்டிங் செய்து வெளியேறிய இன்சமாம் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரை அடக்க முடியாமல்வெளியேறினார். அவருக்கு ஜிம்பாப்வே வீரர்களும், பாகிஸ்தான் வீரர்களும் கைகுலுக்கி விடை கொடுத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications