முன்னாள் துணைவேந்தர் குடும்பத்துக்கு சிறை
சென்னை:சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரனின் மருமகள் மதுதேவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மனோகரன்,அவரது மனைவி, மகன் ஆகியோரை சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
![]() |
பி.டி.மனோகரனின் மகன் நவீன்குமாரின் மனைவி மதுதேவி. இவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணைக் கொடுமைகாரணமாக மதுதேவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும் டிவி நடிகை நிர்மலாவுக்கும், நவீன்குமாருக்கும் இருந்த கள்ளத்தொடர்பு காரணமாகவே மதுதேவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக நிர்மலாவிடம் போலீஸார் விசாரணையும் நடத்தினர். இந்த வழக்கில் நவீன்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில்விடுதலையானார். மனோகரன், அவரது மனைவி கற்பகவள்ளி ஆகியோர் முன்ஜாமீன் பெற்றனர்.
![]() |
இந்த நிலையில் இவர்களுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனையும், நவீன்குமாருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிமதுதேவியின் சகோதரர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனோகரன் உள்ளிட்ட 3 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.அதன்படி இன்று 3 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை 15 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம்உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து 3 பேரின் சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று மாலை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications