மாணவிகளிடம் சில்மிஷம்: த. ஆசிரியர் சஸ்பெண்ட்
வாணியம்பாடி:மாணவிகளிடம் செக்ஸ் திருவிளையாடலில் ஈடுபட்ட பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர், அண்ணா நகரைச் சேர்ந்தவர் அலபான் கென்னடி. இவருக்கு 40 வயதாகிறது. இடையன் பள்ளம்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.
இங்கு 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் கடந்த ஒரு மாதமாக செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட 5 மாணவிகளிடம் மயங்கியஅந்த தலைமை ஆசிரியர் அவர்களை தனியாக அழைத்துச் சென்று செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சேட்டை தவிர அவ்வப்போது குடித்து விட்டும் பள்ளிக்கூடத்துக்கு மப்பில் வருவாராம் அலபான் கென்னடி. இந்த சமயங்களில்மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வாராம்.
அவரது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்த்த மாணவ, மாணவியர் தங்களது ஊரில் சொல்லியுள்ளனர். இதையடுத்துஇடையன்பள்ளம் கிராமமே கொதித்துக் கொந்தளித்து பஞ்சாயத்து தலைவரிடம் புகார் கூறியது.
இதையடுத்து ஆலங்காயத்தில் உள்ள கூடுதல் தொடக்கக் கல்வி அதிகாரி நவநீதி பாலகிருஷ்ணனிடம் புகார் போனது. மாவட்ட தொடக்கக் கல்விஅதிகாரி மாணிக்கத்தின் உத்தரவின் பேரில் விசாரணை நடந்தது.
அதில் குடிபோதையில் வந்தது, மாணவிகளிடம் செக்ஸ் அட்டூழியம் செய்தது ஆகியவை நிரூபணமானது. இதையடுத்து அலபான் கென்னடிசஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் அவர் மீது போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டது. அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications