பாப் உல்மர் கழுத்தை நெரித்துக் கொலை?
கிங்ஸ்டன்:பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜமைக்கா ரேடியோ வெளியிட்டுள்ளசெய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப் உல்மர் மரணம் குறித்து அடுத்தடுத்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் நேற்று தான் முதல் முறையாக பாப் உல்மர்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது.
![]() |
இந்தச் சூழ்நிலையில் பாப் உல்மர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜமைக்கா ரேடியோ செய்தி கூறுகிறது. ஜமைக்கா ரேடியோவின்நிருபர் ரோஹன் போலல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கழுத்து நெரித்துத்தான் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறை இந்த செய்தியை விரைவில்பகிரங்கமாக வெளியிடவுள்ளது. எனக்கு இந்தத் தகவலை யார் கொடுத்தார்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்பவில்லை.
![]() |
மிக மிக நம்பகத்தன்மை கொண்ட ஒரு இடத்திலிருந்து இந்த செய்தி எனக்குக் கிடைத்துள்ளது. விரைவில் இந்த செய்தியை காவல்துறைஉறுதிப்படுத்தும்.
உல்மரின் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்களை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். உல்மர் விழுந்து கிடந்த அறையில் வாந்திஎடுத்த அடையாளம், அவரது உடலிலிருந்து மலம் வெளியேறியது, அறையில் சிதறிக் கிடந்த ரத்தம் ஆகியவை இதை நிரூபிப்பதாக உள்ளது என்றுகூறியுள்ளார் போலல்.
ஜமைக்கா நிருபர் தெரிவித்துள்ள இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, உல்மரின் உடல் சனிக்கிழமை தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்














Click it and Unblock the Notifications