ஆர்ச்பிஷப் ஆரோக்கியசாமி மரணம்
மதுரை:முன்னாள் மதுரை ஆர்ச்பிஷப் ஆரோக்கியசாமி (76) உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்.
மதுரை கத்தோலிக்க மறை மண்டல ஆர்ச் பிஷப்பாக நீண்ட காலம் இருந்தவர் ஆரோக்கியசாமி. 2003ம் ஆண்டு அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.
திருச்சி மாவட்டம் புதூர் உத்தமனூர் என்ற கிராமத்தில் 1931ம் ஆண்டு பிறந்தவர் ஆரோக்கியசாமி. ரோம் நகருக்கு மேல் படிப்பு படிக்கப்போனபோது அங்கு பாதிரியராக மாறினார்.
பின்னர் 1970ம் ஆண்டு கோட்டார் மறை மாவட்ட பிஷப்பாக நியமிக்கப்பட்டார். 17 ஆண்டு காலம் இந்தப் பொறுப்பை அவர் வகித்தார். அவரதுகாலத்தில், மண்டைக்காட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய மதக் கலவரத்தை துணிச்சலான நடவடிக்கையால் முடிவுக்கு கொண்டு வந்தார்.
1987ம் ஆண்டு ஆர்ச் பிஷப்பாக பதவி உயர்த்தப்பட்டார். மதுரை மறைமண்டல ஆர்ச் பிஷப்பாக செயல்பட்டார்.
தனது பதவிக்காலத்தில், அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய திருவருட் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார். மத ஒற்றுமைக்கானஅமைப்பு இது.
இதேபோ ஐக்கிய கிறிஸ்தவ கவுன்சில், சிறுபான்மையினர் முன்னணி ஆகியவற்றையும் ஆரம்பித்தார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது அதைக்கடுமையாக எதிர்த்துப் போராடினார். அதேபோல, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதும் அதற்கு எதிராக போராடினார்.
ஆரோக்கியசாமியின் உடல் அடக்கம் மதுரையில் உள்ள புனித மேரி பேராலயத்தில் சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications