அதிகாரிகள் நடத்திய சவ அடக்கம்
கடலூர்:கடலூர் மாவட்டம் சேடபாளையத்தில் ஜாதிக் கலவரம் காரணமாக, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணின் உடலை அதிகாரிகளே எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.
சேடபாளையம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், வன்னிய சமுதாயத்தினருக்கும் இடையே அடிக்கடி ஜாதி மோதல் நடைபெறுவதுவழக்கம். கடந்த ஜனவரி 1ம் தேதி சிவா என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பச்ை சேர்ந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.
சிவாவின் சவ அடக்க நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கலந்து கொண்டார். சவ ஊர்வலத்தில் பெரும்வன்முறை ஏற்பட்டது. வன்னியர் சமுதாயத்தினரின் 7 வீடுகள் தாக்கி, தீவைக்கப்பட்டன. இதையடுத்து போலீஸார் நடத்திய தடியடியில் ரவிக்குமார்உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
இதனால் சேடர்பாளையத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வந்தது. இந்த நிலையில் முனியம்மா என்கிற 55 வயது தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்மரணமடைந்தார். அவரது உடலை, வழக்கமாக கொண்டு செல்லும் பாதையில் எடுத்துச் செல்லாமல், சேடபாளையம் சாலை வழியாக கொண்டுசெல்ல தாழ்த்தப்பட்ட வகுப்பினர் முடிவு செய்தனர்.
இதற்கு வன்னிய சமூகத்தினர் அனுமதி தர மறுத்தனர். இதனால் மறுபடியும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வருவாய்த்துறை, காவல்துறைஅதிகாரிகள் விரைந்து வந்தனர். கிராமத்திலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
பேச்சு வார்த்தையில் இரு ஜாதியினரும் பிடிவாதமாக இருந்தனர். வழக்கமாக கொண்டு செல்லும் பாதையில் நாங்கள் உடலை எடுத்துச் செல்லமாட்டோம், வேண்டுமானால் நீங்களே எடுத்துச் சென்று அடக்கம் செய்து கொள்ளுங்கள் என்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதையடுத்து உடலை அதிகாரிகளே எடுத்துச் சென்று அடக்கம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன்வருவாய்த்துறை அதிகாரிகள் முனியம்மாவின் உடலை எடுத்துச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த இறுதி ஊர்வலத்தில்முனியம்மாவின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
தொடர்ந்து கிராமத்தில் பதட்டம் நிலவுவதால் போலீஸால் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications