பாமகவுடன் இணைந்து செயல்படுமா அதிமுக?
சென்னை:சட்டசபையில் பாமகவுடன் இணைந்து செயல்படும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபைக் கூட்டத் தொடரையொட்டி அதிமுக எம்.எல்.ஏக்களுடன், கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சட்டசபையில் அதிமுகவும், பாமகவும் இணைந்து செயல்படும் பேச்சுக்கே இடமில்லை. அதுகுறித்து இப்போது எதுவும் கூற முடியாது.
எங்களைப் பொறுத்தவரை அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவோம். நிர்வாக சீர்கேடுகளை எடுத்து வைப்போம்.
சில விஷயங்களில் நாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பிற கட்சிகளின் கருத்துக்களாகவும் இருக்க வேண்டும், இருக்கும் என்று நினைத்து நாங்கள்எதையும் தெரிவிப்பதில்லை.
பொதுப் பிரச்சினைகளில் எங்களது கருத்தை நாங்கள் தெரிவிக்கிறோம். அதுவே கட்சியின் நிலைப்பாடும் ஆகும். நாங்கள் சொல்லும் கருத்துக்கள்பிற கட்சிகளின் கருத்துக்களோடு ஒத்துப் போவதாக பத்திரிக்கைகள்தான் எழுதுகின்றன.
பட்ஜெட் கூட்டத் தொடரில் நான் கலந்து கொள்வேனா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். சட்டசபையில் அடிப்படை மரியாதை,விதிமுறைகளை மதித்தும் நடக்கும் செயல் கிடைப்பதில்லை. பெண்களுக்கு அங்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை.
முதல்வருக்கு எதிராக யாராவது ஏதாவது பேசினால் உடனே அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விடுகிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினால்அமைச்சர்கள் அடிக்கடி எழுந்து சத்தம் போட்டு குறுக்கிட்டு பேச விடாமல் செய்கின்றனர்.
எனக்கு சட்டசபையை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் என்னை பேசவே விடாமல் தடுக்க முயற்சிக்கும்போது நான் என்னசெய்ய முடியும்.?
இந்திய - இலங்கை கடற்படையின் கூட்டு ரோந்து ஆபத்தானது. இதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவிக்கக் கூடாது. மாறாக இந்திய கடற்படையினர்நம் நாட்டின் கடல் எல்லைக்குள் அதிகமாக ரோந்து செல்ல வேண்டும். அதன் மூலம் மீனவர்களின் பிரச்னைக்கும் தீர்வு காணமுடியும்.
உ.பி. தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வேனா என்பது, தேர்தல் தொடர்பான எல்லா ஏற்பாடுகளும் நடந்த பிறகு உங்களுக்கு தெரிய வரும்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக எம்பிக்கள் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தனர்.தற்போது திமுக கூட்டணிக் கட்சி எம்பிக்களும் மனு கொடுத்துள்ளனர். எனவே, காவிரி நீர் பிரச்னையில் அதிமுக நிலைப்பாடு சரியானது என்பதுநிரூபணமாகியுள்ளது என்றார் ஜெயலலிதா.
நாடாாளுமன்றத்தில் அமைச்சர் டி.ஆர். பாலு தாக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, இதற்கு அவர்தான் பதிலளிக்கவேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications