பட்ஜெட்: காங், அரசு ஊழியர்கள் வரவேற்பு
சென்னை:தமிழக பட்ஜெட், ஏழை, எளியவர்கள், அரசு ஊழியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கருத்துதெரிவித்துள்ளது.
தமிழக பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், அரசு ஊழியர்கள், ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள், உடல்ஊனமுற்றோர், விவசாயிகள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கடனுக்காக ரூ. 1360 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. அதேபோல விவசாயக் கடன் வட்டியும் 5 சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் என அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பருப்பு, சமையல் எண்ணை உள்ளிட்டவற்றை ரேஷன் கடைகள்மூலம் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் கருணை நிதி கொண்டு கருணாநிதி தயாரித்த சிறப்பான பட்ஜெட் என்றார்.
ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு சலுகைகள் அளித்து அவர்களின்வாழ்க்கைத் தரம் முன்னேற சமர்ப்பித்த இந்த அரசின் நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.
எல்லாத் தரப்பு மக்களும் பாராட்டுகின்ற வகையில் இந்த வரியில்லா பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள கலைஞர் அரசு பாராட்டுக்குரியதாகும்என்று கூறியுள்ளார்.
இதேபோல பல்வேறு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் சங்கங்களும் பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications