ரிலையன்ஸ் கடைகளை எதிர்த்துப் போராட்டம்:தமிழகம் முழுவதும் மார்க்கெட்டுகள் வெறிச்!
சென்னை:ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய வர்த்தக நிறுவனங்கள் சில்லறை காய்கறிக் கடைகளை நடத்துவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காய்கறிக்கடைகள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால், மொத்த மார்க்கெட்டுகள் அனைத்தும் வெறிச்சோடின.
தமிழகத்தில் குறிப்பாக சென்னை நகரில், ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் சில்லறை காய்கறி விற்பனையில் குதித்துள்ளன. இறைச்சிக்கடைகளையும் அவை திறக்கவுள்ளன.
இதற்கு சில்லறை வணிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வருகையை எதிர்த்து தமிழ்நாடுவணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, அதிமுக, பாமக உள்ளிட்டவை போராட்டத்தில் குதித்துள்ளன.
ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முக்கிய காய்கறி மொத்தக் கடைகளை மூடி போராட்டம் நடத்தவணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள மொத்த காய்கறிக் கடைகள், பழக் கடைகள் மூடப்பட்டன. இதேபோல திருச்சி, கோவை உள்ளிட்டநகரங்களிலும் மொத்தக் கடைகள் மூடப்பட்டன.
கோயம்பேட்டில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இறைச்சிக் கடைகளும் கூடமூடப்பட்டன.
திருச்சியில், காந்தி மார்கெட், சுப்ரமணியபுரம், தெப்பகுளம், உறையூர், சிந்தாமணி போன்ற இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான வணிகர்கள் இந்தப போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோயம்பேட்டில் உண்ணாவிரதப்போராட்டமும் நடந்தது.
இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதுக்குறித்து கோயம்பேடு வணிகர் பாதுகாப்பு சங்க தலைவர்ராஜசேகரன் கூறுகையில், தமிழகம் முழுவதும் 10 லட்சம் வியாபாரிகள் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். எங்கள் போராட்டம் வெற்றிகரமாகநடந்தது.
இந்த போராட்டத்தினால் ரூ.20 முதல் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் மட்டும் ரூ.10 கோடி அளவில் நஷ்டம்ஏற்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் மற்ற இடங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. மதுரை, திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம், ஒசூர், கிருஷ்ணகிரி,கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் முழு அளவில் இருந்தது.
இதனால் இந்த மாவட்டங்களில் காய்கறி, பழங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப் பெரிய மொத்த மார்க்கெட் எனக்கருதப்படும் காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதியே வெறிச்சோடிக் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications