மீனாட்சி கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்
கரூர்:குளித்தலை ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் ஆசிரியை மீனாட்சி. கடந்த 2004ம் ஆண்டு இவர் காணாமல்போனார். மீனாட்சி காணாமல் போன விவகாரத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்திற்குத்தொடர்பு இருப்பதாக அப்போது பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் இந்த வழக்கு தமிழக அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக மீனாட்சி வழக்கில் எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்து வந்தது.இந்த நிலையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்ட பின்னர் வழக்கில் துப்பு துலங்கியது.
கடந்த ஆண்டு குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரபுரம் என்ற இடத்தில் வயல் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தமீனாட்சியின் எலும்புக் கூடும், அவரது மொபட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.
மீனாட்சியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து புதைத்ததாக சண்முகவேல், குமார்ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போதுநாங்கள் அப்பாவிகள் என்று இருவரும் தெரிவித்தனர். மேலும் சில சாட்சிகளும் பிறழ் சாட்சயம்தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று இவ்வழக்கில் நீதிபதி அய்யப்பன் தீர்ப்பளித்தார். அதன்படி இரு குற்றவாளிகளுக்கும்ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications