மனைவி யார், தங்கை யார் என்று தெரியாதபெரியார் பேரன்: இளங்கோவனுக்கு வீரமணி சூடு
சென்னை:பெரியாரின் மனைவி யார், தங்கை யார் என்று கூட தெரியாத, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, அவரது பேரன் என்று சொல்லிக் கொள்ளவும்,பெரியார் படம் குறித்தும் பேச எந்தத் தகுதியும் இல்லை என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி காட்டமாக கூறியுள்ளார்.
பெரியார் படம் குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சரும், பெரியாரின் பேரனுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சில கருத்துக்களைத்தெரிவித்திருந்தார்.
அதில், பெரியாரின் மனைவி கண்ணம்மா குறித்து பெரியார் படத்தில் எந்தக் கருத்தும் கூறப்படவில்லை, நாகம்மை குறித்து சரியாக காட்சிகள்இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தி.க. பொதுச் செயலாளர் கி.வீரமணி மீதும் சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் உண்ணையில் கண்ணம்மா பெரியாரின் மனைவி இல்லை, அவரது தங்கை, இது கூடத் தெரியாமல் தன்னை பெரியாரின் பேரன் என்றுஇளங்கோவன் சொல்லிக் கொள்வது வெட்கக் கேடானது என்று வீரமணி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இளங்கோவனின் குற்றச்சாட்டு குறித்து கி.வீரமணியிடம் தட்ஸ்தமிழ் தொடர்பு கொண்டு கேட்டபோது, கண்ணம்மா பெரியாரின் தங்கை, மனைவிஅல்ல. பெரியாருடன் தொடர்பு கொண்ட இளங்கோவனுக்கு இது கூட தெரியாதது ஆச்சரியமாக உள்ளது, கண்டனத்துக்குரிய பேச்சு இது. தன்னைபெரியாரின் பேரன் என்று எப்படி சொல்லிக் கொள்கிறார் இளங்கோவன் என்று புரியவில்லை.
பெரியார் படம் வெளிவரட்டும். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் முத்திரையைக் கிழிக்கும் பல தகவல்களை நான் வெளியிடுவேன். அவரைமக்களுக்கு அம்பலப்படுத்துவேன் என்று படு காட்டமாக கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications