தொடரும் வாகன எரிப்பு: துப்பு துலங்குகிறது
சென்னை:சென்னை நகரில் ஆட்டோ டிரைவரை தாக்கி விரட்டி விட்டு விட்டு ஆட்டோவைக் கடத்திச் சென்று அதற்குத் தீ வைக்கப்பட்டது. வாகனங்களுக்குத் தொடர்ந்துதீவைக்கப்பட்டு வரும் இந்த சம்பவங்களால் காவல்துறை பெரும் குழப்பமடைந்துள்ளது.
சென்னை நக>ரி கோடம்பாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட வாகனங்கள்மர்மமான முறையில் தீயில் எரிந்தன.
மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள் என பல வகையான வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
யாராவது மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இதைச் செய்யலாம் என போலீஸார் சந்தேகித்தனர். ஆனால் இதுவரை யாரும் பிடிபடவில்லை. சென்னை நகரில் உள்ளபலரும் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களை வீடுகளுக்கு வெளியில்தான் நிறுத்தி வைக்கின்றனர். எனவே இந்த தீவைப்புச் சம்பவங்களால் கார்களை வெளியில்நிறுத்தி வைப்போர் பெரும் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.
நேற்றும் ஒரு ஆட்டோவுக்கு தீவைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நகர் புகழேந்தி தெருவைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் அதிகாலை 3 மணியளவில் காசி தியேட்டர்அருகே தனது ஆட்டோவுடன் நின்றிருந்தார். அப்போது ஒரு நபர் அவரை அணுகி நெசப்பாக்கம் போக வேண்டும் என்று கூப்பிட்டுள்ளார். சண்முகவேலும்ஆட்டோவை எடுத்துக் கொண்டு நெசப்பாக்கம் போயுள்ளார்.
குறிப்பிட்ட இடம் வந்ததும் ஆட்டோவை நிறுத்திய சண்முகவேல் 100 ரூபாய் கட்டணமாக கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நபர், தனது கையில் இருந்த கத்தியை எடுத்துக் காட்டி, என்னிடமே பணம் கேட்கிறாயா என்று கோபமாக கூறியபடி சண்முகவேலை கீழே தாக்கி தள்ளிவிட்டார். பின்னர் ஆட்டோவை அந்த நபரே ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.
பதறிப் போன சண்முகவேல் தனது ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து சக டிரைவர்களிடம் தகவலைக் கூறி அவர்களுடன் அங்கு விரைந்து ஆட்டோவைத் தேடிப் பார்த்தார்ஆனால் ஆட்டோ கிடைக்கவில்லை.
இந் நிலையில் ராமாபுரம் கோத்தாரி நகர் 9வது தெருவில் சண்முகவேலின் ஆட்டோ தீயில் கருகிய நிலையில் நின்றிருந்தது. சென்னை நகரில் வாகனங்களுக்குத்தீவைத்து வரும் நபர்தான் இந்த செயலைச் செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
சண்முகவேலின்டம் ஆட்டோவைக் கடத்திய நபரின் அடையாளங்களை போலீஸார் சேகரித்துள்ளனர். இதை வைத்து அந்த நபரின் முகத்தை கம்ப்யூட்டர்உதவியோடு வரைய தீர்மானிக்கபப்ட்டுள்ளது.
கருப்பு பேன்ட், வெள்ளைச் சட்டையில் வந்த அந்த நபர் கெச்சலாகவும், மாநிறத்தில் இருந்ததாகவும் சண்முகவேல் தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் கட்டிங்தலையுடனும் அவர் காணப்பட்டுள்ளார்.
வாகனக் கடத்தல் மற்றும் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவரின் அடையாளம் ஓரளவுக்குத் தெரிய வந்துள்ளதால் இன்னும் ஒரு வாரத்தில் அந்த நபரை அல்லதுஅக்கும்பலை வளைத்துப் பிடித்து விடுவோம் என மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
மர்ம தீயில் இதுவரை 16 வாகனங்கள் எரிந்து போயுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications