அயர்லாந்தை வென்றது வெஸ்ட் இண்டீஸ்
கிங்ஸ்டன்:அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
"டி" பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டன. இந்த நிலையில் இப்பிரிவில் கடைசி லீக்போட்டி நேற்று நடந்தது.
கிங்கஸ்டனில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் அயர்லாந்து பேட்டிங் செய்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களைசோதிக்கும் வகையில் நிதான ஆட்டத்தை தொடங்கினர் அயர்லாந்து வீரர்கள்.
படு நிதானமாக ஆடிய அயர்லாந்து ஒருபக்கம் பரவாயில்லையே என்று சொல்லும் அளவுக்கு ரன்களையும் எடுத்து வந்தது. தொடக்கஆட்டக்காரராக இறங்கிய பிரே படு நிதானமாக ஆடி 41 ரன்களை எடுத்தார். போத்தா சிறப்பாக ஆடி 28 ரன்களை சேர்த்தார். மெக்கல்லன்ஆட்டமிழக்காமல் 20 ரன்களை எடுத்தார்.
இடையே மழை குறுக்கிட்டதால் 48 ஓவர்களைக் கொண்டதாக போட்டி சுருக்கப்பட்டது. இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்ததுஅயர்லாந்து.
பின்னர் ஆடத் தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தது. சந்தர்பால் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 102ரன்களை எடுத்தார். சர்வான் 36, சாமுவேல்ஸ் 27 ரன்கள் எடுத்தனர். 38.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 190 ரன்களை எடுத்துமேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications