கண்கட்டு வித்தை பட்ஜெட்: ஜெ. சாடல்
சென்னை:மக்களை ஏமாற்றும் கண் கட்டு வித்தை போல ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது திமுக அரசு என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
தமிழக அரசின் 2007-08 பட்ஜெட் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு நிறுவனத்தின் ஆண்டு வரவு செலவுக் கணக்கு போல இந்த பட்ஜெட் உள்ளது. மக்கள் நலனுக்கான அறிக்கையாக இது இல்லை. எனக்குசட்டசபையில் உரையாற்ற போதுமான நேரம் தந்தால், யாரும் குறுக்கிடாமல் என்னைப் பேச அனுமதித்தால், பட்ஜெட் குறித்த கருத்துக்களைசபையில் விரிவாக எடுத்துரைப்பேன்.
மக்களை ஏமாற்ற, எடுக்கப்பட்ட, கண்கட்டி வித்தைதான் இந்த பட்ஜெட். தங்களது ஏமாற்று வேலைகளை மக்களை நம்ப வைக்க இந்த பட்ஜெட்டைபயன்படுத்தியுள்ளார் அன்பழகன்.
திமுகவினர் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த நிலையில் தற்போதுசொல்கிற திட்டங்களை எல்லாம் அடுத்த ஆண்டிலாவது விவசாயிகள் பெறுவார்களா என்பது சந்தேகம்தான்.
விவசாயிகளுக்கான பயிர்க் கடன் வட்டி 7 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் வாங்கி கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கே இந்த வட்டிக் குறைப்பு சலுகை கிடைக்கும் என்பதுதான் உண்மை நிலவரம்.
எனது ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் தொழில் வளம் பெருகியது. அடிப்படைக் கட்டமைப்பு மேம்பட்டது. அதை வைத்துத்தான் இப்போதுதமிழகத்தை நோக்கி பல பெரும் நிறுவனங்கள் வரத் தொடங்கியுள்ளன. அதேபோல தற்போது உள்ள நிதி ஆதாரம் எல்லாம் அதிமுக ஆட்சியில்,எனது அயராத உழைப்பின் விளைவாக உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகை. இதைத்தான் பல பயனற்ற திட்டங்களுக்கு திமுக அரசுபயன்படுத்தி வருகிறது.
பட்ஜெட்டில் வரவு செலவுக் கணக்கு தெளிவாக இல்லை. உண்மையான நிதி நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதுகுறித்து வெளிப்படையாகஅறிவிக்க வேண்டும்.
அரசின் வருமானம் உயர்ந்துள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை எல்லாம் எனது ஆட்சியில் மணல் குவாரி,மதுபான விற்பனை ஆகியவற்றை அரசே எடுத்துக் கொண்டதால் அதனால் கிடைத்த வருமானம்.
இந்த நிதி நிலை அறிக்கை ஒரு இலக்கற்ற அறிக்கை, இதில் தீர்க்கமான பார்வை இல்லை, மக்கள் நலனுக்கென்று எதுவும் இல்லை. இந்த நிதி நிலைஅறிக்கையில் உள்ள அம்சங்கள், திட்டங்கள் சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications