சங்கரா மருத்துவமனை ரூ.240 கோடிக்கு ஏலம்!
சென்னை:சங்கர மடத்திற்குச் சொந்தமான சங்கரா மருத்துவமைன ரூ. 240 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவின்ஒப்புதலுக்கு இதுதொடர்பான மனு அனுப்பப்பட்டுள்ளது.
காஞ்சி காமகோடி பீட அறக்கட்டைளக்கு சொந்தமாக சென்னை அருகே பெரும்பாக்கத்தில் சங்கரா மருத்துவமனை உள்ளது. முன்பு இந்த மருத்துவமனையின் பெயர்தமிழ்நாடு மருத்துவமனை ஆகும். பின்னர் சங்கர மடம் இதை வாங்கி சங்கரா மருத்துவமனை என பெயர் மாற்றியது.
இதை கையகப்படுத்துவதில் தான போயஸ்கார்டனுக்கும் சங்கர மடத்துக்கும் இடையே முட்டிக் கொண்டது. சங்கராச்சாரியாரை உள்ளே தள்ளியன் பின்னணியில்இந்த விவகாரமும் இருப்பது விரிவாகவே விவாதிக்கப்பட்டது. மருத்துவமனையை அமுக்க மன்னார்குடி கும்பல் தீவிரமாக முயன்று தோற்றதால் தான் கொலை கேசில்மாட்டி விடப்பட்டார் ஜெயேந்திரர் என்றார்கள்.
இந் நிலையில் இந்த சங்கரா மருத்துவமனையை ஏலத்தில் விற்க சங்கர மடம் தீர்மானித்தது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்தது. வியாழக்கிழமைஇந்த ஏலம் நடந்தது.
ஏலத்தின்போது சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் ரூ. 220 கோடிக்கு ஏலம் கேட்டது. இதையடுத்து கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.236 கோடிக்கு கேட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீராம் நிறுவனம் தனது தொகையை ரூ. 240 கோடியாக உயர்த்தியது. அதற்கு மேல் யாரும் கேட்கவில்லை.
இதையடுத்து இந்த ஏலம் தொடர்பான விவரம் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவுக்கு தெரிவிக்கப்பட்டு ஏலத்தை இறுதி செய்ய அனுமதி கோரப்பட்டது.
அந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி அதிக தொகையை ஏலமாக கேட்ட ஸ்ரீராம் நிறுவனம் அதில் 10 சதவீதத் தொகையை நீதிமன்றத்தில் கட்டுமாறும், இந்தஇடத்தை ஏலத்திற்கு எடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பது குறித்து விளக்கமாக ஒரு அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.
மார்ச் 28ம் தேதிக்குள் இவற்றை ஸ்ரீராம் நிறுவனம் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஏலம் இறுதி செய்யப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications