சங்கடப்படுத்திய பாமக எம்எல்ஏக்கள்-கருணாநிதி
சென்னை:திமுக பேச்சாளர் வெற்றிக்கொண்டான் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து விமர்சித்தற்காக, பா.ம.கஎம்.எல்.ஏ.க்கள் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தலைமைச் செயலகத்திற்குள் ஏந்தி வந்ததுசங்கடத்தை கொடுத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாகவே நம்முடையதோழமைக்கட்சி அணியில் உள்ள பா.ம.கவுக்கும், திமுகவுக்கும் இடையே சில தேவையற்ற கசப்புணர்வுகளுக்குவித்திடப்பட்டுவிட்டது.
தோழமைக் கட்சிகளின் அணியின் தலைவர் என்ற முறையில் திமுகவைப் பற்றியும், ஆட்சியைப்பற்றியும்விமர்சனங்களை வெளியிட எந்தக் கட்சிகள் மீதும் குறை காணுகிற மோதல் போக்கை கடைப்பிடிக்காமல்,தோழமையைக் கட்டிக்காக்கும் தூய எண்ணத்தோடு அமைதியாக இருந்து வந்திருக்கிறேன்.
இந்த நிலையில், கழகத்தின் முன்னணிப்பேச்சாளர்களில் ஒருவரான தம்பி வெற்றிகொண்டான், பா.ம.க நிறுவனத்தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் கழக ஆட்சியைப்பற்றி செய்துள்ள விமர்சனங்களுக்கு பதில் என்றபெயரால் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் திமுக கடைபிடித்து வருகின்ற கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு ஆகியவற்றிக்கு மாறான வார்த்தையைப் பயனபடுத்தியிருப்பது கண்டு நான் மிகவும்வேதனைப்படுகிறேன்.
இதுப்பற்றி கோ.மணி தலைமையில் என்னிடம் புகார் செய்ய வந்த பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்களிடம்விளக்கம் அளித்து வருத்தமும் தெரிவித்திருக்கிறேன். ஆனால் எனக்குள்ள ஒரே ஒரு சங்கடம், தலைமைச்செயலகத்தின் உள்ளேயே, முதலமைச்சர் அறைக்குள் கண்டன வாசகங்கள் எழுதியுள்ள பதாகைகளோடுஅவர்கள் வந்ததுதான்.
இதைச் சட்டமன்ற உறுப்பினர்கள் பின்பற்றினால் விரும்பத் தகாத ஒரு முன்னுதாரணம் ஆகி விடும் என்பதைபாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உணரவேண்டும். இதை நான் சொல்வதால்வெற்றிகொண்டான் பேட்டியின் வாசகங்களை நியாயப்படுத்துவதாக அர்த்தம் இல்லை என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications