உல்மர்: இன்சமாம், கனேரியாவிடம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

கிங்க்ஸ்டன்:பாகிஸ்தான் கி>க்கெட் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை தொடர்பாக கேப்டன் இன்சமாம் உல் ஹக், பந்து வீச்சாளர் டேணிஷ் கனேரியா, அணி மேலாளர்பெர்வேஸ் மிர் ஆகியோரிடம் ஜமைக்கா போலீஸார் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். 2 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது போலீஸாரின் சந்தேகம்வலுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அணிக்கும், அயர்லாந்துக்கும் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் படு மோசமான தோல்வியைத் தழுவியது. அன்று இரவுதான் பாப் உல்மர் கொலைசெய்யப்பட்டார்.

முதலில் அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து உல்மரைக் கொலை செய்திருக்க வேண்டும், உல்மருக்குத் தெரிந்தவர்கள்தான் இந்தக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான், அயர்லாந்து போட்டி முடிந்த பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கும், உல்மருக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கலாம். அதன் தொடர்ச்சியாக இந்தகொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள், அணி நிர்வாகிகள் மட்டுமே இருந்துள்ளனர். எனவே இவர்களில் யாரோதான் இந்தக் குற்றத்தைசெய்திருக்கக் கூடும் எனவும் சந்தேகம் வலுத்துள்ளது.

கொலை நடந்த உல்மரின் அறையில் பதிவாகியுள்ள கைரேகைகளை போலீஸார் சேகரித்துள்ளனர். அதேபோல பாகிஸ்தான் வீரர்கள், அணி மேலாளர், செய்தித்தொடர்பாளர் ஆகியோரின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.

இதில் இரு வீரர்களின் கைரேகைகள் உல்மரின் உடல் மற்றும் அறையில் இருந்த ரேகைகளுடன் ஒத்துப் போகிறதாம். எனவே அந்த வீரர்களிடம் தீவிர விசாரணைநடத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் கேப்டன் இன்சமாம் உல் ஹக், சுழற்பந்து வீச்சாளர் கனேரியா (இவர் உல்மரின் அறைக்கு அடுத்த அறையில்தான் தங்கியிருந்தார்), செய்தித்தொடர்பாளர் மிர் ஆகியோ>டம் போலீஸார் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை வேகம் பிடித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணியினர் கிங்ஸ்டன் நகரை விட்டு வெளியேற நேற்று தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்துஅவர்கள் மான்டிகோ பே நகருக்குக் கிளம்பினர். அங்கிருந்து பாகிஸ்தான் செல்லத் தயாராக இருந்தனர்.

ஆனால் அவர்களில் சந்தேக வலையில் சிக்கியுள்ள 2 வீரர்களை மட்டும் அங்கிருந்து பாகிஸ்தான் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்குஅவர்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறு தடையேதும் விதிக்கப்படவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட்வாரியம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் அணியினர் தங்கியுள்ள ஹோட்டலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் அனுமதியின்றி வெளியில் செல்ல முடியாதபடி போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதைப் போல பாகிஸ்தான் அணியினர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரிடமும் டி.என்.ஏ. சோதனையும் நடத்தப்படுள்ளது.இதற்கான ரத்த மாதிரிகள் சேக>க்கப்பட்டுள்ளன.

தற்போது நடந்து வரும் விசாரணையில் சூதாட்டப் பிரச்சினை காரணமாகவே உல்மர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்திற்கு வலு சேர்ந்து வருவதாகபோலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்துவது போல, உல்மர் எழுதிக் காண்டிருந்த தனது வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகள் அடங்கிய தாள்களையும் காணவில்லைம். அவற்றை யாரோசிலர் கிழித்து எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் வைத்திருந்த லேப்டாப் கம்ப்யூட்டரும் காணாமல் போயுள்ளது. அதில் சூதாட்டம் குறித்த பலதகவல்களை உல்மர் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து சில இந்திய, பாகிஸ்தானிய சூதாட்டக்காரர்களின் தொலைபேசி எண்கள்பெறப்பட்டுள்ளதாகவும் முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ஜமைக்கா போலீஸார் மறுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+