ஜிங் சக்..ஜைங் சக்..மாத்தி போடும் சூ.மூர்த்தி
சென்னை:தமிழக அரசின் 2007-08ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசி>யர்கள் சங்கங்கள் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளன.
இது குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் கோ. சூரியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியோடு வாழுகின்ற வகையில் தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு அளித்துள்ள 2007-08 ஆண்டு நிதிநிலை அறிக்கையைதமிழகத்தில் பணிபு>யும் 13 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் சார்பாகவும், 5 லட்சம் ஓய்வுதியர்கள் சார்பாகவும் வாழ்த்தி பாராட்டி மகிழ்ச்சியோடுவரவேற்கிறோம்.
முதலமைச்சர் கருணாநிதியின் 60 ஆண்டுகால அரசியல் வாழ்வின் அனுபவ முத்திரை நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு வரியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது மிகுந்தபாராட்டும் வரவேற்புக்கும் உரியதாகும்.
தமிழக முதல்வருக்கும், அவரது தலைமையிலான நல்லரசுக்கும், நிதியமைச்சர் அன்பழகனுக்கும், திட்டக்குழு துணைத்தலைவர் நாகநாதனுக்கும் மற்ற உயர்அதிகாரிகளுக்கும் அரசு அலுவலர் சார்பில் நன்றியை தெ>வித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
கடந்த அதி.க ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு மிக பலத்த சப்தத்துடன் ஜிங் சாக் அடித்தவர் சூரியமூர்த்தி என்பது நினைவிருக்கலாம். இவர் மீது பண மோசடி வழக்குஒன்று நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு அறிவித்தபடி ஜனவரி 1ம் தேதி முதல் 6 %அகவிலைப்படி உயர்வை ரொக்கமாகவும், பண்டிகை முன் பணத்தை ரூ.2,000 ஆக உயர்த்தியும் உள்ளதை வரவேற்று மனநிறைவோடு பாராட்டுகிறோம் எனக்கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஓய்யூதிய அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் காதர்மீரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் பறிக்கப்பட்டசலுகைகள் அனைத்தும் மீண்டும் வழங்கி அரசு- ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியர் நெஞ்சங்களில் தமிழக முதல்வர் கருணாநிதி நீக்கமற நிறைந்துள்ளார் எனக்குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசி>யர்கள் கூட்டணி அமைப்பின் பொதுச் செயலாளர் சா.அன்பழகன், சத்துணவு சங்கம், தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்கம்ஆகியவையும் பட்ஜெட்டிற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications