கு.க.வுக்கு தாய் மறுப்பு- பிறந்த குழந்தையைகாட்ட மறுக்கும் அரசு மருத்துவமனை !!
காஞ்சிபுரம்:குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள தாய் மறுத்ததால், அவருக்குப் பிறந்த குழந்தையை கண்ணில் காட்டாமல் தவிக்க விட்டு வருகிறது காஞ்சிபுரம்அரசு மருத்துவமனை.
காஞ்சிபுரம் அருகே உள்ளது ஆரப்பாக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ரேஷ் என்பவ>ன் மனைவி தீபா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த தீபா, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன் குறை பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது. குழந்தையைக் கண்ணில் காட்டுவதற்கு அரசு மருத்துவமனை ஆயாக்கள் பணம் கேட்டுள்ளனர்.மேலும், குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் அதற்கு உடன்பட தீபா மறுத்து விட்டார். இதனால் குழந்தை பிறந்து 3 நாட்களாகியும் குழந்தையை தாயின் கண்ணில் காட்டாமல் இருந்துள்ளனர் அந்த கொடூரஆயாக்கள்.
பிறந்து 3 நாட்களாகியும் குழந்தையை காட்டாமல் தனிமைப்படுத்தியதால் இது குறித்து தீபா மருத்துவமனையை டீன் டாக்டர் எஸ்.குமாரிடம் புகார் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், குழந்தை ஆணாக இருந்தால் ரூ.500-ம் பெண்ணாக இருந்தால் ரூ.300-ம் பணம் கொடுக்க வேண்டுமாம். அப்படிக்கொடுத்தால்தான் குழந்தையை தாயிடம் காட்டுவார்களாம். இல்லாவிட்டால் தலைகீழாக நின்றாலும் கூட குழந்தையைக் காட்டவே மாட்டார்களாம்.
பிணம் தின்னும் கழுகுகளை விட கேவலமான இந்தப் பிறவிகளின் அட்டகாசங்களுக்கு என்றுதான் முடிவோ?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications