ரசிகர்கள் ஆத்திரம்: ஜாகிர்கான் ஹோட்டல் சூறைடிராவிட், டோணி கொடும்பாவி எரிப்பு!
புனே:உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கேவலமாக தோற்று வெளியேறியதால் ஆத்திரமடைந்துள்ளரசிகர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் குதித்துள்ளனர். புனேவில் உள்ள ஜாகிர்கானின்ஹோட்டல் சூறையாடப்பட்டது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 2வது சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.இதனால் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் இந்திய வீரர்களின் போஸ்டர்கள், பேனர்கள், உருவ பொம்மைகளை தீயிட்டுக்கொளுத்தினர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கானின் ஹோட்டல் உள்ளது.
கொண்டவா என்ற இடத்தில் உள்ள இந்த ஹோட்டலில் இன்று ஒரு கும்பல் நுழைந்து ஹோட்டலைசூறையாடியது. இசட்கே என்று பெயரிடப்பட்ட அந்த ஹோட்டலில் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருட்களைதூக்கிப் போட்டு உடைத்தனர்.
இருப்பினும் உடனடியாக போலீஸார் வந்து விட்டதால் அக்கும்பல் தப்பி விட்டது. ஹோட்டலுக்கு பெரியஅளவில் சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு போலீஸார் அதிக அளவில்குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, பெங்களூரில் கேப்டன் ராகுல் டிராவிட்டின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. டிராவிட் தவிர மற்றவீரர்களின் போஸ்டர்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
டிராவிடை உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இளம் வீரர்களை அணியில் சேர்க்கவேண்டும், மூத்த வீரர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கோஷமிட்டனர்.
ரசிகர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள டிராவிட், ராபின் உத்தப்பா, கும்ப்ளே ஆகியோரின்வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோணியின் சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் ரசிகர்கள்கொந்தளித்துள்ளனர். டோணியின் உருவ பொம்மை மற்றும் போஸ்டர்களை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
வங்கதேசம், இலங்கை ஆகிய இரு போட்டிகளிலும் டோணி ஒரு ரன் கூட எடுக்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதில் தமிழகத்தின் திணேஷ் கார்த்திக்கை சேர்க்க வேண்டும் என பல தரப்பினரும்கோரி வந்தனர். ஆனால் டிராவிட் அதை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் கோபத்தையடுத்து டோணியின் பெற்றோர் வசிக்கும் வீடு, புதிதாக கட்டி வரும் வீடு (வங்கதேசபோட்டிக்குப் பின்னர் இந்த வீட்டின் சுற்றுச்சுவரை ரசிகர்கள் தாக்கி இடித்தது நினைவிருக்கலாம்) ஆகியவற்றுக்குபோலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications