பெர்முடா ஜெயிக்குமா, இந்தியா பிழைக்குமா??
போர்ட் ஆப் ஸ்பெயின்:பெர்முடா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் பெர்முடா ஜெயித்தால்இந்தியாவுக்கு சூப்பர் 8 வாய்ப்பு இருப்பதால் இந்திய ரசிகர்கள் பெர்முடா ஜெயிக்குமா, இந்தியா பிழைக்குமா என்ற நப்பாசையில் உள்ளனர்.
உலகக் கோப்பைப் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. வங்கதேசமும், பெர்முடாவும் இதில்மோதுகின்றன.
இந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை சூப்பர் 8 சுற்றுக்கு படு சூப்பராக முன்னேறி விட்டது. இந்தியா 2 தோல்விகளுடன் போட்டியிலிருந்துவெளியேற்றப்பட்டுள்ளது. இன்னொரு அணியான வங்கதேசம் 2 புள்ளிகளுடன் உள்ளது. இன்றைய போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால்சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விடும்.
மாறாக பெர்முடா ஜெயித்தால், ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே இன்றைய போட்டியில்பெர்முடா ஜெயிக்குமா என்ற நப்பாசையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால் பெர்முடா ஜெயித்தால் அது உலக அதிசயமாகவே கருதப்படும். காரணம், பெர்முடா, கிரிக்கெட்டுக்கு கற்றுக் குட்டி. உலகக்கோப்பைப்போட்டிக்கு முன்பு நடந்த முத்தரப்பு போட்டித் தொடரில் பெர்முடாவை, வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. எனவேஇன்றைய போட்டியிலும் பெர்முடாவை, வங்கதேசம் கொத்து புரோட்டா போடும் வாய்ப்பே அதிகம்.
இன்றைய போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால், முதல் முறையாக 2வது சுற்றுக்கு முன்னேறிய பெருமை அந்த அணிக்குக் கிடைக்கும். 1999ம்ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆரம்பித்தது வங்கதேசம். இது அந்த அணிக்கு 3வது உலகக் கோப்பைப் போட்டியாகும். கடந்த3 போட்டிகளில் தற்போதுதான் முதல் முறையாக 2வது சுற்றுக்கு அது முன்னேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications