எதிரிக்கட்சிகளை நசுக்கும் கருணாநிதி: ஜெ
சென்னை:எதிர்க்கட்சிகளின் குரல் வளையை முறித்து அவர்களை அழித்து ஒழிக்க முயலுகிறார் முதல்வர் கருணாநிதி என அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜனநாயக நாட்டில், ஆளுங்கட்சியின் குற்றம், குறைகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின்கடமை, உரிமை. அதை விடுத்து ஆளுங்கட்சியினருக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்கி வற்புறுத்த முயல்வது,சர்வாதிகார செயலாகவே கருதப்படும்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதலே ஜனநாயகத்தின் குரல் வளை நெறிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையை பயன்படுத்தி அதிமுக தொண்டர்கள் மீதுஅடக்குமுறை ஏவி விடப்பட்டுள்ளது.
கடலூரில் 2 நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் பேசிய அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச் செல்வன்மற்றும் நான்கு கழக பேச்சாளர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீஸார். கருணாநிதிக்கு எதிராக அவர்கள் பேசியதாக கூறிவழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஐந்து பேரையும் கைது செய்ய பெரும் போலீஸ் படையே அங்கு வந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால்,போலீஸாரால் அவர்களை கைது செய்ய முடியவில்லை.
ஒரு கட்சியின் இலக்கிய அணிச் செயலாளரையும், கட்சியின் பேச்சாளர்களையும் கைது செய்ய, ஏதோ பயங்கரவாதிகளைப் பிடிக்க வருவது போலபெரும் போலீஸ் படையை அனுப்பியது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவில் உள்ள பேச்சாளர்கள் எல்லாம் தரம் தாழ்ந்துதான் எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரை பன்றி என்றுகூறி விமர்சனம் செய்தவர் முதல்வர் கருணாநிதி. அப்படிப் பார்த்தால் முதலில் கருணாநிதியைத்தான் கைது செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் குரல்வளையை முறிக்கும் செயலை முதல்வர் கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது அவருக்கே பாதகமாகமுடியும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications