கற்பழிப்பு முயற்சியில் மாணவி கொலை
திருப்பூர்:கோவை மாவட்டம் திருப்பூர் அருகே 13 வயது மாணவியைக் கற்பழிக்க முயன்ற 36 வயது இளைஞர், முயற்சி தோல்வி அடைந்ததால் அந்தசிறுமியை இரும்புக் குழாயால் அடித்துக் கொலை செய்தார்.
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் அருகே உள்ள கூலிபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா. 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதுமாணவியான இவரிடம், உறவினரான செந்தில்குமார் (36) என்பவர் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம்.
வயது வித்தியாசம் அதிகம் என்பதால், இவர்கள் பேசுவதை பெரியவர்கள் தவறாக நினைக்கவில்லை. இதனால் சந்தியாவை தொடர்ந்து சந்தித்துப்பேசி வந்துள்ளார் செந்தில்குமார். அப்போதெல்லாம் அவரை சீண்டி பேசுவாராம். இது சந்தியாவுக்கும் தவறாக தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று சந்தியா படிக்கும் பள்ளிக்குச் சென்று தனது பைக்கில் வீட்டுக்குக் கூட்டிச் செல்ல முயன்றுள்ளார் செந்தில்குமார். ஆனால் பள்ளிவேனில்தான் அவரை அனுப்புவோம். தனி நபர்களுடன் அனுப்ப மாட்டோம் என பள்ளிக் கூடத்தில் சொல்லி விட்டனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த செந்தில்குமார், சந்தியாவின் தாயார் தோட்டத்தில் உடல் நலம் இல்லாமல் இருப்பதாக கூறி அவரை அழைத்துக்கொண்டு தனது பைக்கில் கிளம்பியுள்ளார்.
தோட்டம் வழியாக சென்றபோது திடீரென பைக்கை நிறுத்தி விட்டு, சந்தியாவை கற்பழிக்க முயன்றார். இதை எதிர்பாராத சந்தியா, சத்தம் போட்டுஅவரிடமிருந்து தப்ப முயன்றார்.
இதனால் பயந்து போன செந்தில்குமார், சந்தியாவின் தலையில் அருகே கீழே கிடந்த இரும்புக் குழாயை எடுத்து பலமாக அடித்துள்ளார். அதில் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார் சந்தியா. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
மகள் நெடுநேரமாகியும் வீடு திரும்பாததால் பதறிய பெற்றோர் பள்ளியில் போய் கேட்டபோது செந்தில்குமாருடன் சென்றதாக தெரிவித்தனர்.இதையடுத்து செந்தில்குமாரிடம் பெற்றோர் கேட்டபோது தனக்குத் தெரியாது என்று கூறி விட்டார்.
இதையடுத்து சந்தியாவை பல இடங்களிலும் தேடினர். அப்போதுதான் தோட்டத்திற்குச் செல்லும் காட்டுப் பகுதியில், சந்தியா பிணமாக கிடந்ததுதெரிய வந்தது.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சந்தியாவின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பயந்து போன செந்தில்குமார்தனது மனைவியுடன் தலைமறைவானார். ஆனால் போலீஸார் அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications