இன்டர்நெட்-தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.75 கோடி
சென்னை:தமிழக அரசு அலுவலகங்களில் இணைய தள வசதியை ஏற்படுத்த ரூ. 75 கோடி நிதியை அளிக்கவுள்ளதாக முதல்வர் கருணாநிதிக்கு, மத்தியதொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மின்னியல் ஆளுமைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை தமிழ் நாட்டில் மாநிலம் தழுவிய விரிவான இணைய தள வசதிகளை ஏற்டுத்துவதற்காக நிதியுதவி செய்கிறது.
இத்திட்டத்திற்கென மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.99.75 கோடி நிதியுதவி செய்து, அதில் ஏற்கனவே ரூ.19 கோடி நிதியுதவி அளித்தது.
அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் வட்டாசியர் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை, பதிவுத்துறை,நகராட்சிகள், பேரூராட்சிகள், குடிமைப்பொருட்கள் வழங்கல் துறை ஆகிய துறைகளின் அலுவலகங்களில் இணைய தள வசதிகளை புதிதாகஏற்படுத்துவதற்காக ரூ.75 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் வரும் ஏப்ரல் மாதத்தில் சென்னையில் மாநில மின்னியல் தொகுப்பு மையம் ஒன்றை மத்திய அரசு சார்பில் ஏற்படுத்த இருப்பதாகவும் மத்தியஅமைச்சர் தன் கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications